பக்கம்:வெண்ணிலவு நீ எனக்கு.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 சிந்தனை அவளது சித்தம் முழுவதையும் இனிக்கச செய்தது. அவள் திரும்பினுள். ஹாலில் மேஜைமீது இருந்த அரை வட்டக் கண்ணுடி யொன்று அவள் எழிலை மாற்றுரைத்துக் காட்டியது. நெற்றி மையத்தில் பிறை வடிவில் குங்குமம் இருந்தது. சுருள் படிந்த கேசிங்கள் சில பொட்டுக்கு திருஷ்டி கழித்துக் கொண் டிருந்தன. சோளியின் கழுத்துப் பக்க இடைவெளியில், தாலியின் தங்க நிறம் அவளது மேனியில் பட்டுப் பிரதி பலித்து அழகு சேர்த்துக் கொண்டிருந்தது. 'மேகலை’ என்று கூப்பிட்ட அவள் மாமியார் அவ ளுக்கு விபூதி பூசினுள் ; மல்லிகேஸ்வரர் ஆலயத்தின் திசை நோக்கித் தொழுதாள் அவள். கண்க்ளில் திரு நீற்றுத்துகள் ஒன்றிரண்டு விழுந்திருக்க வேண்டும் ; அதனுல்தான் மேகலை அப்படி கண்களை மூடி மூடித் திறந்தாள்போலும் ! அத்தையுடன் மருமகளும் தொடர்ந் தாள். கூடத்தில் தொங்கவிடப்பட்டிருந்த மாமல்ல னின் நிழலுருவம் காபினெட் அளவில் காட்சியளித் தது. நான் அத்தானுடைய உடைமைப் பொருள் ; வாஸ்தவம்தான். ஆளுல், அவளுடைய உத்தரவு இல்லாது உள்ளே என் போக்கில் நுழைந்து செல் கிறேனே ? நாளைக்கு சொந்தக்காரர் சூடாக ஏதாவது ஒரு சொல் சொல்லமாட்டாரென்பது என்பது என்ன நிச்சயம் ? என்ற வினுேதமான ஐயப்பாடு தலையை விரித்துக்கொண்டு எழுந்தது. இனம் விளங்கமாட்டாத ஏதோ திகில் அல்லது வேதனை, இனம் புரியாத ஏதோ ஒரு வடிவெடுத்து, இனம் கண்டுகொள்ள இயலாத ஏதோ ஒரு தொங்கலிலிருந்து தன்னைப் பயமுறுத்திக் கொண்டிருப்பதைப் போன்று அவள் உணர்ந்தாள் : அவளது மனம் அறிந்தது ; மனத்தின் நுண்ணிய அறி வுணர்ச்சி தெரிந்து கொண்டது. இதய விளக்குபற்றி எரிந்தது. 姿 நெற்றிப் பொட்டில் வலி உண்டாயிற்று. வலது கைக் கட்டை விரலையும் மோதிர விரலையும் வைத்து அழுத்தினுள் மேகலை. இதமாக இருந்தது. எரியும் தீபத்தைத் தூண்டிவிட உதவும் அதே துரும்பு, தீபத்