பக்கம்:வெண்ணிலவு நீ எனக்கு.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சட்டையின் கழுத்துப் பட்டையை நுனி விரலால் தூக்கிளுன் அவன் ; செயற்கைக் காற்று மேனியைத் தழுவியது. இடைவேளை மணி ஒலித்தது. பசிக்குப் பதில் சொல்வதில் அவரவர்கள் முனைப்பாகக் காணப் பட்டார்கள். துக்குக் கோர்வைகளும், காகிதப் பொட்ட னங்களும் பிறவிப் பயன் அடைந்தன. மாமல்லன் ஹோட்டலுக்குச் செல்லவேண்டும்; எழுந்தான். வீட்டிலிருந்து புறப்படுகையில், 'அத்தான், இன்னிக்கி மாத்திரம் மவுண்ட்ரோட் ஹோட்டலிலே சாப்பிட்டுக் கொள்ளுங்க. நாளேயிலிருந்து சாப்பாட்டுக் காரி மூலம் ஆபீசுக்கு சாப்பாடு அனுப்பிடுகிறேன். என்ன, சரிதானே ?' என்று புன்னகையுடன் சொன் ளுள் மேகலை. குடும்பப் பொறுப்பு அவளை எத்தகைய முறையில் இயக்கத் தொடங்கி யிருக்கிறதென்பதை நினைத்துப் பார்ப்பதற்கு ஒரு கணப்பொழுது மட்டுமே அவனுக்கு இடை .ே வ ளே யாய் க் கிடைத்தால் போதுமா ? - பிற்பகல் உணவுக்குப் பிறகு, மாமல்லன் தன் இருப் பிடத்தில் அமர்ந்தவுடன், அவனுக்குத் தொலை பேசி அழைப்பு ஒன்று வந்தது. ஸ்டுடியோவிலிருந்து திரு மாறன் பேசிஞன். பெரிய இடத்துப் பிள்ளை நாம் வரும் தேதியை கவனத்தில் வைத்துக்கொள்ள வேண்டு மென்று அவனுக்கு என்ன அக்கறை இருக்கப் போகி றது ? என்றுதான் மாமல்லன் முடிவுக் குறிப்புத் தயா ரித்து வைத்திருந்தான். நண்பனின் அன்புக் குரலேக் கேட்டதும் அவனுக்கு உடம்பு சிலிர்த்தது. எப்போது உன்னே வீட்டில் பார்க்கலாம்? என்ற கேள்விக்கு மாமல்லன் கொடுத்த பதில், இன்றைக்கே வா, திரு மாறன். உனக்காக ஏழு மணிக்குக் காத்துக் கொண் டிருப்பேன், தெரியுமா?’ என்பது. உடல் பாதி, ஆசை பாதி என்பார்கள். மனிதப் பிண்டங்களுக்கெனவே எழுப்பப்பட்ட வாசகம் இது. ஆசைகள் கூடாதென்ற பரிபக்குவ நிலை, அடைவதற்கு மாமல்லன் ஞான ஜோதி புத்தர்பிரான் அல்ல. ஆகவே, அவன் தாராளமாக ஆசைகளை வளர்த்தான், நியதி