பக்கம்:வெண்ணிலவு நீ எனக்கு.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i 15 தவருத வழிகளிலே! ஆசைக் கொழு கொம்பு அன்பு : அன்புக்குத் தேர்வுகூடம் கனவு ; கனவுக்குத் தீர்ப்புரை வழங்கவல்லது மனித வாழ்வு. இப்படிப்பட்ட சங்கிலித் தொடர்புகொண்ட நடைமுறை வாழ்க்கையில், மாமல்ல னின் நெஞ்சத் தளத்திடை தலை நிமிர்ந்த ஆசைகள் பல உண்டு. அந்த ஆசைகளுள் ஒன்று லட்சியம் ஆனது அதுவே கனவாகவும் மாறியது. அந்தக் கனவு நினவாயிற்று. மேகலை கிட்டினுள். கிட்டிப்புள் விளை யாட்டில் கெவித்த சிறுவனப்போல வானத்துக்கும் பூமிக்கும் எகிறி எ கிறித் தாவிஞன குதித்தான். அத குல்தானே அவனும் அவளும் வானத்திற்கும் பூமிக்கு ம்ாகப் பிரயாணம் செய்து சுவர்க்கத்தைக் காண் முடிந் தது ! காதற் பெண்கள் கடைக்கண் பார்வை கிடைத்து விட்டால், காற்றிலேறி விண்னே முற்றுகையிடுவதுகூட சுலபமாகி விட்டதா...? _ - துணி நிலாவில் மேகக் கறை லேசாகப் படிய எத்த னம் செய்தது. அவன் தப்பித்தான் ; மனம் கட்டுப்பட் டது; உற்ற தோழனைப்பற்றி மட்டுமே மாமல்லன் எண்ணத் தலைப்பட்டான். தன் இரண்டாவது ஆசைப் பிரகாரம் திருமாறனிடமே சிந்தாமணியை ஒப்படைக்க வழி என்னவென்று ஆராய்வதில் மூளையைச் செலவழித் தான. இன்னும் இருபது நிமிஷங்களில் திருமாறன் வந்து விடுவான் ! - சவுக்கார நூரை மாமல்லனின் முகத்திற்குக் கனி வைத் தந்தது. புட்டா மாவுகளே கொடுத்தது. துணைவி யிடம் திருமாறனின் வருகையைப்பற்றிச் சொல்லாமல் இருப்பானு ? விருந்தோம்பலில் தமிழ் மக்கள் அடையும் பெருமையில் பெரும் பகுதி பெண்களுக்கே உடமை. மேகலை புத்துடைகளை மேனியில் போர்த்தினுள் ; கண்ணுடியில் தாலிப் பொட்டுத் தெரிந்தது ; கண்களில் ஒற்றிக் கொண்டாள் : மின்னும் நட்சத்திரங்கள் வைர அட்டிகையின் கண்களாகச் சேவை செய்தன. முன்னே பின்னே அறிந்திருக்காத, ஆளுல் விட்டகுறை