பக்கம்:வெண்ணிலவு நீ எனக்கு.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i 6 தொட்ட குறையின் பலாபலனுக விளைந்த சம்பவம் அது. மாயா லோகத்தைச் சார்ந்த பெரிய கோடீஸ்வரரின் திருக்குமானை திருமாறன. அவள் ஒரு முறையோ அல்லது இரண்டு தாமோதரன் கண்டிருக்கிருள்-அது வும் அரிய்லூரில்- அவள் இல்லத்தில்! பாசபந்தம் எப்படி யெப்படி யெல்லாமோ சூதாடிப் பார்த்தது. அவளது மாங்கல்ய பாக்கியம் அவளுக்கும் திருமாற னுக்கும் பந்தத்தை உண்டு பண்ணவில்லே. ஆளுல், பாசம் மட்டும் நிலைத்தது. திருமாறனின் அன்பையும் பாசத்தையும் அவளால் மறக்க முடியாது. ஏனென்ருல், வைர அட்டிகை நெஞ்சோடு நெஞ்சாகத்தானே சதா விளையாடிக் கொண்டிருக்கும் ! திருமாறன் வந்து விட்டான்...! ஆடுதுறை ஜவுளி வண்டி மாதிரி அவ்வளவு பெரி தாகவும் நீளமாகவும் இருந்தது பிளிமத்' கார் ஆவன் இறங்கினுன். நாலைந்து கனத்த காகித டப்பாக்களையும் பழக்கூடை ஒன்றையும் டிரைவர் ஒரே நடையில் சுமந்து போளுன். வாசலில் காத்து நின்ற மாமல்லன் நண்பனே இன் முகம் காட்டி வரவேற்ருன். கணவனின் நிழலைப் பிரிந்து நின்ற மேகலை 'வணக்கம் அண்ணு : வாருங்கள்,' என்று முதமன் உரைத்தாள். "அண்ணு ' என்னும் அந்த மந்திரச் சொல் கேட்டு திருமாற்ணின் உடம்பு புல்லரித்தது. உதட்டுச் சிரிப்பு கண்களுக்குத் தாவியது; விழிகளின் வெள்ளம் இதழ்க் கரையில் அலைமோதியது. மாமல்லனுக்குக் கட்டு மீறிய ஆனந்தம். சிநேகிதனே வழிகாட்டி அழைத்துச் சென்ருன் அவன். 'வாங்க, தம்பி ' என்ருள் மாமல்லனைப் பெற்றவள். மேகலேயிடம் தூய புன்முறுவலேயே பதி லாகத் தெரிவித்த மாதிரி, கோசலை அம்மாளுக்கும் பதில் சொல்ல அவன் இதழ்களில் சிரிப்பை வரவழைத்தான். நடையில் பவானி சமக்காளம் விரிக்கப்பட்டிருந்தது. அதன் ஒரு பகுதியைப் பிடித்துக்கொண்டு நெருடிக் கொண்டிருந்தான் திருமாறன்.