பக்கம்:வெண்ணிலவு நீ எனக்கு.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

117 “மாறன், இது மாய மந்திர ஜமக்காளம் அல்ல. பயப்படாதே எங்கேயும் பறந்து விடாது ஆமாம் ; டி.பன் சாப்பிடத் தயார்தானே ?” மாமல்லன் கேட்ட கேள்வியின் எதிரொலி தேய்ந்த போது, மேகலையின் சிரிப்போசை புதிதாகக் கேட்டது. பதியின் நகைச் சுவையை அனுபவிக்க வேண்டியவள் அவள். அவனுக்குத் தலை கொடுத்தவள் ஆயிற்றே !” சாப்பிடுங்கள் : மேகலை உச்சரித்தாள். ரவைக் கேசரி ஒரு தட்டி லும் ஒழப் பொடிக்கலவை இன்னென்றிலும் இருந்தன. தண்ணிரை ஒரு மிடறு அருந்தியபின், மீண்டும் தலை யைத் தரைக்குத் தாழ்த்தினுன். 'மாமல்லன், நீ.சாப்பிடலையா ??? * முதலில் ருசி பார்த்ததே நான்தானே...?? 'ஏன், உனக்கு முன் குல் ஹோட்டலில் சுவைத் திருப்பார்களே ?? "ஓஹோ, அப்படியானுல் மேகலைக்கு இம்மாதிரிப் பலகார்ம் செய்து பழக்கமில்லேன்னு நினைச்சிட்டியா ? அங்கேதான் நீ தப்பு செய்திட்டே மேகலை செய்த பலகாரம்தான் எல்லாம் ' என்று விவரித்த சடுதி யுடனே மனைவியை ஓரக் கண்கொண்டு பார்த்தான் மாமல்லன். அதெல்லாம் பொய்;. நீங்க சொல்றதுபோல ஹோட்டல் பலகாரம்தான், அண்ணு ' என்று விடை பகர்ந்தாள் மேகலை. காப்பிக் கோப்பைகளும் காலியாயின. இனிப்புத் தினுசுகள், பழவகைகள், துணிமணிகள் ஆகியவற்றைப் பிரித்து நீட்டினுன் திருமாறன். 'ஏற்கெனவே நீ கொடுத்த வைர நகைகளின் சுமை யைத் தாள முடியாமல் நாங்கள் இரண்டு பேரும் திணறிக் கொண்டிருக்கிருேமே, போதாதா ? இவை வேறு எதற்கு, மாறன் ?” மாமல்லன், நீ என்பேரில் சுமத்தியிருக்கிற அன்புச் 8