பக்கம்:வெண்ணிலவு நீ எனக்கு.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 பாடின. மரக்கலங்கள் வெற்றி முரசெறிந்த வீரப்பட லத்தின் ஏடுகள் வாய் திறந்தன. ஆஹா!...'கலங்கள் இயங்கும் மல்லக் கடல் மல்லைத் தலசயனம்’ என்னும் திருமங்கை யாழ்வாரின் பாசுரம் எவ்வளவு மெய்யான வாக்கு பல்லவப் பேரரசின் பார்புகழும் கியாதியை நன்றியுடன் எடுத்தியம்பும் கனவின் வடிவமாகக் காட்சி யளித்த அந்தக் கலைக் கழகத்திற்கு மாமல்லன் அஞ்சலி செய்தான். அவனது கண்களின்றும் கண்ணிர் முத்துக் கள் ஒவ்வொன்ருகச் சிதறி விழுந்தன. - "அத்தான்!” என்று அழைத்து அவனை பூவுலக்குக் கொண்டு வந்து நிறுத்தினுள் மேகலை. மாமல்லனின் நேத்திரங்கள் அகல விரிந்தன. ஆழியும் கலங்கரை விளக்கமும் ஆதரிசப் பொருள் கிள்ாகத் தோன்றின. மேகலை கீழே குனிந்தாள். கடற்கரை மணலில் கை விரல்களை அழுத்தினுள். 'முத்துக்களைச் சிந்தி விட்டீர்களே, அத்தான் ? ? என்று கேட்டாள் அவள். மேகலை, அதோ பார் ! பேசும் உன் கயல் விழி களைக் கண்டு பொருமை மிகக் கொண்டு கடல் மீன்கள் தாவித் தாவி ஆழத்தைத் தேடி ஓடுகின்றன !...இங்கே பார், பேசும் ேெநிசித்திரங்கள், பேசிக் ಧ್ಧಿ உன் விழிக் கணைகளின் காந்த சக்தியின் முன் வாய் புதைத்துக் காணப்படுகின்றன ...கடல், கலை, கனவு ஆகிய இம்மூன்றும் என்ன தன்னிலைக்குக் கொண்டு வந்தபோது, இவ்வாறு நீர் முத்துக்களைச் சிந்துவதன் மூலமாகத்தான் அவற்றுக்கு நன்றி தெரிவிக்க எனக்குத் தெரிந்தது!’ - மாமல்லனின் முகத்தில் புன்னகை கோலம் செய். தது. - மேகலையின் வதனத்தில் விழிநீர் கோடு கிழித்தது. மேகலை, இப்பொழுதுதான் எனக்கு நிறைவு உண் டானது. அழியாத தமிழ்க் கலைக்கு நீயும் உன் பங்குக்கு நன்றி செலுத்திவிட்டாய். ரொம்பவும் சந்தோஷம். சரி, வா, புறப்படுவோம்.’’ என்று சொல்லி அவளுடைய