பக்கம்:வெண்ணிலவு நீ எனக்கு.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 - தெரியாது. இங்கே வந்ததிலேயிருந்து இரண்டுதரம் நீங்க உணர்ச்சி வசப்பட்டிட்டீங்களே, அத்தான் ??? "ஓஹோ அப்படியா ...நான் என்னவோ ஏதோ வென்று பயந்து போனேன். உன்னிடம்கூட கண்ணி ரைக் கண்டேனே; மாமன் மகளே ...”

  • 逊。。。°

மெல்லிய இதயம் பெண்களுக்கு மட்டிலும் சொந்த மில்லை; ஆண்களுக்கும் உண்டு என்பது இதிலிருந்து புரிகிறதல்லவா? 'ம் ...'-நையாண்டிச் சொல் : அவளுக்கு அழகு காட்டி, அவளது கன்னத்தைக் கிள்ளப் போனுன் அவன். ஆல்ை அவனுடைய ஆள் காட்டி விரல், அவளது மார்பை அலங்கரித்த வைர அட்டிகையில் பதிந்தது. தன் இடது கையை விரித் தான். வைர மோதிரம் ஒளியை உமிழ்ந்தது. திரு மாறன நினைத்தான். கட்டாயம் அவன் மாமல்லபுரத் துக்கு வருவதாக வாக்களித்துவிட்டு, கடைசியில் ஏன் வரவில்லை ?...காரை அனுப்பியதோடு நின்றிருக்க லாகாதா?...நூறு ரூபாய் பணத்தையும் ஏன் அனுப்பி ஞன்...? அர்ஜூனன் தவம், குகைக் கோயில்கள், கல் யானை முதலியவற்றைக் கடந்து சென்றபோது, சிதிலமடைந்த சிற்பம் ஒன்று வழிமறித்தது. வேலிக்குப் போட்ட முள் காலுக்கு வினையாப் போச்சு-அப்படின்னு ஒரு பழ. மொழி உண்டு. அது கணக்கிலேதான் இந்த நட்பும் இருக்குது ' என்று அங்கலாய்த்தவன், சிதைந்த கோயி. லின் நப்பாசையையும் நிறைவேற்றினன். வெளிப் பக்கச் சுவரில் ஏதேதோ வாசகங்கள் கிறுக்கப்பட்டிருந்: தன. அமரகவியின் பாட்டு கரித்துண்டினுல் எழுதப்பட் டிருந்தது. காதலினுல் மனிதர்களுக்குக் கவிதை உண் டாம் ; கானம் கிட்டுமாம் ; சிற்பம் போன்ற கலைகள்கூடக் கிடைக்குமாம் ! அவன் பார்வை கீழிறங்கியதும், அவன் நிலைகலங்கிப் போளுன். காரணம் : சுவரில் வரைப்பட் டிருந்த பெண் சித்திரத்திற்கு அடியில் மேகலை’ என்றும்,