பக்கம்:வெண்ணிலவு நீ எனக்கு.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 கரடியாவதைப் பற்றியோ, அங்கே நுழைவதைப் பற்றியோ யோசனை பண்ணியிருக்க முடியும்...!

  • என்னவோ, உங்கள் தனிமையில் குறுக்கிட நான் விரும்பவில்லை. ஆங்கிலேயர்களுக்குத் தேநிலவுப் பய ணத்துக்கு எத்தனையோ பாதைகள் வழி திறந்து கிடக்குமாம்! அதுபோல அமைய நம் தமிழ்ச் சாதி அனுமதிக்காது போனுலும், இம்மாதிரிப் பயணங்கள் வாழ்க்கைப் பயணத்துக்குரொம்பவும் உதவும். வாழ்வின் பங்குதாரர்கள் ஒருவரை யொருவர் நன்கு புரிந்து கொள்ளவும் பயன்படும்... ' என்று பேசிளுன் திருமாறன். -

மாமல்லனின் சித்தம் குலோத்துங்கன் வரைந்து சென்றிருந்த சித்திரத்துக்கு ஓடியது. தலை கனத்தது. நண்பனை அழைத்துக்கொண்டு விடுதி அறைக்குள் பிர வேசித்தான். பிரியாணிப் பொட்டலங்கள் பிரிந்தன. பிளாஸ்கிலிருந்து காப்பி வழிந்தது. காப்பியைச் சுவைத்துக் கொண்டிருந்த மேகலை, இருந்தாற்போல மயங்கித் தரையில் சாய்ந்தாள். ஆற்றங்கரைப் பிள்ளையாரைப் போல அப்படியே சமைந்து விட்டான் மாமல்லன். . டிரைவர் கொண்டு வந்த தண்ணிரை வாங்கி மேகலையின் முகத்தில் திருமாறன் தெளித்தான். நூறு வினுடிகளுக்குப் பிற்பட்டு, டாக்டர் வந்தார். மேகலை’கன் திறந்தாள். திறந்ததும், முதன் முதலில், அத்தான்!” என்று கூவினுள். . மாமல்லனே ஆடாமல், அசையாமல் கண்ணிர் வடித்துக் கொண்டே யிருந்தான். அத்தான், எனக்கு ஒன்றும் இல்லை. அழாதீர்கள், அத்தான் என்ற சொற்கள் செங்கற்பட்டு ராஜ பாட்டையில் எதிரொலித்துக் கொண்டிருந்தன