பக்கம்:வெண்ணிலவு நீ எனக்கு.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 உரிமை பதில் சொன்னது. கல்லூரியில் பாடம் கேட்ட கம்பர் சித்திரம் ஒன்று இதயத்தில் அழகுகாட்டிற்று. மிதிலைச் செல்வி புனையா ஓவியம் எனப் பேசப்படுகின்ருள். அந்தச் சொற்ருெ உரை மேகலைக்குக் கொடுக்க வேண்டுமென்று ஆசைப் பட்டான் அவன். ஆசைக்கு வெற்றி கிடைத்தது. மாமன் மகளே அழைத்தான் ; மேகலை உண்டாக்கிய பண் జ్ఞత్థా-369, பின் தொடர்ந்து மறுகி மறுகி வந்தாள் மேகலை. சாதாரணமாக அழகான ஓர் உருவத்திற்கு வரம்பு காட்டி, வடிவு சொல்லி விளக்கம் தரும்போது, சித்திரத் தில் எழுதித்தான் அந்த அழகைப் பார்க்க வேண்டும் . என்பார்கள். மேகலையின் அழகை எழுதிப்பார்க்க மாமல்லன் சித்திரக்காரன் அல்ல; அவ்வாறு புதிய பதவி ஏற்கவும் தயாராகவில்லை ; ஏற்கவும் மாட்டான். ஏனென் ருல, அவன் என்ருல் அவள்தான் ; அவள் என்ருல் அவன்தான். மேகலை-மாமல்லன் கதை நூதனமானது. விட்ட குறை-தொட்ட குறையின் கணக்குப் பார்த்து, மும்மை வினைப்பயன் தெரிவித்த ஐந்தொகையை ஆராய்ந்து, பூஜா பலன்களின் புள்ளி விவரங்களை நிர்ணயம் செய்து, முடிவுக்கு முத்தாய்ப்பிட்டு, மாயனுர் குயவன் செய்யும் உயிர்நிறை மண்பாண்டங்கள் எத்தனை எத்தனையோ ஒட்டை உடைசல்களாக உருமாறி, உரு வழிந்து போய்விடுவது உண்டு. ஆனல், இந்த இணையைப் பொறுத்தமட்டிலே நான்முகன் நல்ல்வனு கவே அமைந்திருந்தான். அழகுக்குப்பிணை யென் அழகையே உண்டாக்கி யிருந்தான். மேகலைக்கு ஏற்ற வன் மாமல்லன் . கோசலை அம்மாள் பால் கொணர்ந்து கொடுத்தாள். மாமல்லன் அருந்தின்ை. மகனுக்குப் படுக்கை விரித்துக் கொடுத்தாள். அன்னை கீழே சென்ருள். அவன் மற்ற விளக்குகளை அனைத்தான். மேஜை விளக்கின் மங்கலான ஒளியில், அம்மாதத்தின் தமிழ்ச் சஞ்சிகை ஒன்றைப் புரட்டின்ை. கடிதம் ஒன்று இருந்தது. பதட்டம்