பக்கம்:வெண்ணிலவு நீ எனக்கு.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13 i வளர்ந்து கொண்டிருந்தது. ஒளிக் கருவிகள் ஓசை படாமல் செயலாற்றின; மேற்பார்வை செய்து பயிற்சி யளித்தவர் காது செவிடுபட இரைந்து தீர்த்தார். மாமல்லன் மாத்திரமல்ல, அவன் துணைவியும் படப் பிடிப்பைப் பார்த்தாள். காதலித்த ஜோடி ஒன்று ஆணும் பெண்ணும் இடம் மாறிப் புகுகிருர்கள். பெண்ணுக்கு யாரோ ஒருவன் மங்கல நாண் பூட்டுகிருன். பின்னேயொரு நாளிலே முன்னம் உள்ளம் கவர்ந்த காதலனை பேதை நல்லாள் சந்திக்கும்படி நேரிடுகிறது. கணவன் இக் காட்சியைக் காணுகிருன். இருவரையும் மனம்விட்டுப் பேசுமாறு சொல்லிவிட்டு அவன் வெளியில் புறப்பட்டுச் செல்கிருன் முடிவுபெற வேண்டிய பூர்த்தியடையாக் காதலின் கதைக்கு வாழ்வு அளிக்கப்படுகின்றது. காதல் வாழ்கின்றது ! படப் பிடிப்பில் அன்றையப் பகுதி முடிந்தது. திரும்ாறன் அந்தத் தம்பதியை வீட்டுக்குக் கூட்டி யனுப்பினுன் வீடு வந்த மேகலை மிகவும் கலகலப்பாக் இருந்தாள். ஆளுல், மாமல்லளுே முகத்தில் களையின்றிக் காணப்பட்டான். படப்பிடிப்பில், கணவன் பாத்திரம் ஏற்ற நடிகர் சொன்ன அந்த வார்த்தைகள் இன்னமும் நினைவில் நெரித்துக்கொண்டிருந்தன. காதலை உண ராதவர்கள் ஏற்படுத்தும் முடிவுக்குப் பலியாகும் உள்ளங் களை நான் அறிவேன். நீ என் உயிர்த் துனேவி. நான் உனக்கு உரிமை கொடுக்கிறேன். நீ காதலித்த இளைஞனை இன்று சந்தித்திருக்கின்ருய்; எனவே, மனம் விட்டு அவருடன் உரையாட நான் சம்மதம் அளிக் கிறேன். மன்த்தில் உறுதிப் பண்பு இருக்கும் வரையில் எந்த மாயையும் என் கண்களைக் கட்ட் முடியாது. நான் காதலித்த பெண்ணைக் காண நேர்ந்தால், அவனோடு அன்புடன் பேசி மகிழ்வேனல்லவா? அது மாதிரி தானே உனக்கும் மனம் துடிக்கும் ? பார்த்துப் பேசு வதில் தவறு ஏதுமே கிடையாது, மாலினி. பிறந்த காதலை கோடு கிழித்து அதனுள்ளே உலவச் செய்து வாழ விடுவதுதான் மனித தர்மம் ஆளுல், தமிழ்ப்