பக்கம்:வெண்ணிலவு நீ எனக்கு.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 பண்பை மட்டும் நீங்கள் இருவரும் மறந்துபோய் விடா தீர்கள், உன் நண்பருக்குக் காப்பிப் பலகாரம் கொடு. நான் திரும்பி வந்ததும் எல்லோரும் ஒன்ருகவே உண வருந்துவோம்! என்ற பேச்சுக் கதம்பம் மாமல்லனின் ரத்தத்தை ஒன்று சேர்த்துச் சுண்டச் செய்து தி அழலை இருதயத்தில் ஏந்தி வைத்தவாறு துடியாய்த் துடித்தான். பெண் சிற்பத்தின் பேசும் சக்தியைப் பறித்துக்கொண்டு தன்னுடைய தனி அறைக்கு ஓடினுன் ; மேஜைமீதி ருந்த நெருப்புப்பட்ட கறுப்புப் பகுதி அவன் நெஞ்சத் துத் தீயை ஊதியணைக்க எத்தனம் செய்தது. அன்ருெரு நாள் நள்ளிரவு கழிந்து மேகலை முகம் சுளித்தபோழ்து எழுதப்பட்ட அக்கடிதம், அவளுடைய சிரிப்பை மாமல்ல னின் கட்புலன் உணர்ந்த கணத்திலேயே தீக்கரையான சம்பவம், அது ' - - * இரவின் துடிப்பில் இரு இதயங்களின் துடிப்பும் இரண்டறக் கலந்தது! கல்லினுள் தேரைக்கும் கருப்பை உயிர்க்கும் புல்லு ணவு தந்து போற்றும் தயாளன் இருக்கும்வரை நாட்கள் ஒடக் கேட்க வேண்டியதில்லை. ஒன்றுமே இடைவேளையில் நடைபெருததாகவே எண்ணி, கடந்ததை மறந்து செல்லப் பழக்கிக்கொண் டான் மாமல்லன். மேகலையின் மேனித் திரையில் தாய் மையின் மெருகு ஏற்றிக்கொண்டிருந்த லாவண்யத்தை கணத்துக்குக் கணம் ரசித்துக் கொண்டிருந்தான் அவன். மாயையை வென்று மனத் திண்மையைப் பலப்புடுத்திக் கொள்ள்வே முயன்ருன். சென்னையில் பார்க்கவேண் டிய இடங்களை யெல்லாம் மேகலைக்குக் காண்பித்தான். நாடகம் சினிமா, நடனம் சங்கீதம் போன்ற நிகழ்ச்சி களில் குறிப்பிடத்தக்கவை அனைத்தையும் மேகலை பார்த்துவிட்டாள் என்பதுவே சரி. . . அலுவலகத்தில் இயந்திரமாகி, வீட்டுக்கு மனிதனுக உருக்கொண்டு வந்து சேர்ந்த மாமல்லனிடம் கடித மொன்றை நீட்டினுள் மேகலை. யாருடைய கடிதத்தை அல்லும் பகலும் எதிர் நோக்கிக் கொண்டிருந்தர்னுே,