பக்கம்:வெண்ணிலவு நீ எனக்கு.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i35 குக் கொணர்ந்து அசை போடுமாமே, அப்படித்தான் ம்ாமல்லனின் நிலையும் நினைவும் இருந்தனவோ ? ஏங்கிய உள்ளம் நீதிமன்றமாகி, உறங்காத மனச் சான்று நீதிபதியாகி, தவறு சுமந்த தையல் மேகலை கூண்டுக் கைதியாகி புதிய உலகம் சமைந்தது. விசித் திரம் நிறைந்த காட்சியொன்று மாமல்லனுள் ஏடு விரிந் தது. விந்தையை கருக்கொண்ட பேதைமைச் சிரிப்பின் அலைகள் நொந்த மாமல்லனின் சிந்தையைப் பலிபீட மாக்கிக் கொண்டன. பலிபீடமா ? இல்லை, கொலு பீடமா ?... குலோத்துங்கன் ஏன் சிரித்தான் ? தொலே யட்டும்; அது அவனுடன் கூடப்பிறந்த வியாதி ஏன் அவன் இங்கே வந்தான் ?... 'குலோத்துங்கன், ஏன் இங்கே வந்தீர்கள் ? வெறி பிடித்த வெஞ்சினத்துடன், திறந்த வாய்மூடாமல், இரை தேடி, இறைவனின் துணை நாடாது, சித்தத்தில் அழித் தெழுத்ாச் சித்திரமெனத் தோன்றிய சித்திரப் பாவை யினுல் என் சித்தம் குலைந்து, என் உடல் சீரழிந்து, என்க்கு உடையவளால் என் ஆவி அடங்க வாய்ப்புத் தராமல், என்னை நானே அழித்துக் கொண்டிருக்கும் இத்தகைய அவல நிலையிலே-பயம் கக்கும் சூழலிலே நீர் ஏன் வந்தீர்?...பேசாத பதுமையான நீங்கள் என் றைக்கு இதழ் விலக்கப் போகிறீர்கள்? வெண்ணில விலே மையிருட்டு சங்கமம் ஆகிவிடும் தருணத்திலா? அல்லது, வீசுந்தென்றல் விச்ை மிகுந்த சூருவளியைக் கட்டிப் பிடித்து ஐக்கியமான பின்னரா?...ஆண்டவன் அருளிய மனிதத் தன்மையை அவனுக்கே திருப்பிக் கொடுத்துவிடும் வள்ளலாக ஆக நான் விரும்பவில்லை; ஆகவே, என்னுள் நான் உழுது பயிரிட்டுப் பண்படுத் திக் கொண்டிருக்கும் அந்த மனிதப் பண்புக்குச் சோதனையாளராக நீர் மாறி விடுமுன், இங்கிருந்து போய்விடும்? உடன் பிறவாச் சோதிரி சிந்தாமணியின் அணுகிய நோக்கிலே என்னைத் தவறிழைத்தவனுக ஆக்கி விட்டுத்தான்_இங்கிருந்து விடைபெற்றுப் புறப் பிட்ப் போகின்றிர்ோ, என்னவோ?.எனையாளும் ஈசனே ! உன் முடிவை நான் அறியலாகாதா? -