பக்கம்:வெண்ணிலவு நீ எனக்கு.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 மேகலை இருவருக்கும் காப்பி கொண்டு வந்து வைத்தாள்; அருந்துமாறு கோரினுள். கொண்டவனிடம் காட்டப்பட்ட குழைவு, ஒண்டவந்தவனிடமும் மாற்றுக் குறையாமல் விலை போன்து. அமைதியைப் பறித்து இடுப்பில் செருகிக்கொண்ட 'களு நினைவுப் புண்ணே கோலிட்டு வேதனைக்குள்ளாக்கி யது. தாய்மை மெருகு ஏறிய அவளுடைய மேனியில் அடங்கிக் கிடக்க ஒப்பாத பட்டுப் புடைவை சரிந்து விழுந்துகொண்டே யிருந்தது. மாமல்லனின் கண்கள் இரண்டும் அவளை விழுங்கி விடுவனபோலிருந்தன. தலே தப்பியது தம்பிரான் புண்ணியம் என்று நினைத்துக் கொண்ட மேகலைக்குரிய கருவண்டு ஜோடி திசை திரும்பிச் சுழல எத்தனம் செய்தது. 'காப்பி குடிக்கவில்லையே, மிஸ்டர் மாமல்லன் 'குலோத்துங்கனுக்குப் பேசத் தெரியும் தன் கடமையை நிறைவேற்றிவிட்டு, கணக்காக கால்மேல் கால் போட்டு அமர்ந்தபடி சிகரெட்டை எடுத் துப் பற்ற வைக்கத் தொடங்கிளுன் குலோத்துங்கன். வேடிக்கை பார்த்தாள் மேகலை. எங்கோ இட்ட தீ எங்கோ பற்றி எறியத் தொடங் கிற்று; அவன் துடித்தான். அவன் எனில், குலோத். துங்கன் விலக்கு ! . - "நீங்கள் குளித்து விடலாமே? வெந்நீர் போட்டிருக் கிறேன். இன்றைக்கு அநேகமாக சிந்தாமணி வந்து விடுவார்கள் !" என்ருள் மேக்லை. மாமல்லன் தேள் கொட்டிற்ைபோன்று துடித்தான். புகை அடங்கியது. எங்கே?-மாமல்லன் வகையில் அல்லவே! . . . . . . > . . நெற்றிச் சுருக்கங்கள் விரிந்து விலக மேகலையை குலோத்துங்கன் உன்னிப்பாகக் கவனித்தான். "நல்லதுங்க! -