பக்கம்:வெண்ணிலவு நீ எனக்கு.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

139 மேகலை புறப்பட முயன்ருள். ஸ்டுலுக்கு அழகு செய்தவை : பால், தாம்பூலம். மேகலை, நம் விருந்தினர் மிஸ்டர் குலோத்துங்கன் என்ன செய்து கொண்டிருக்கிருர்?' என்று கேட்டான் அவன். # வி ைவிடுத்தவனிடமே விடையையும் ஆராய முதன புவள்போல, அவள் அவனுடைய கண்களின் வழியே சென்று திரும்பிளுள். அத்தான்! என்ருள், பயம் தட்டுப்பட்ட குரலுடன். 'என்ன மேகலை ??? மாமல்லனுக்குப் பயம் பிடுங்கித் தின்றது. என் கண்களில் என்ன தேடினுள் : கண்கள் மூலம் இதயத் தைப் புரிந்துகொள்ள முடியுமென்று உளநூல் சொல் கிறதே! இன்று இராப் பொழுதுக்குள் அதை முடித்து விட வேண்டுமென்று பூடகமாய்ச் சொன்னேனே, ஒரு கால் எதை என்பதை அறிந்து விட்டனளோ?...' என் னும் ஐயப்பாடு தோன்றியது. அவன் 'ப்பூ!...” என்று அலட்சியமாக இருந்து விட்டான். மேகலை அவன் அருகில் அமர்ந்து நெற்றியில் பஞ்சு விரல் அமர்த்தித் தொட்டுப் பார்த்தாள். விம்மிப் புடைத்திருந்த தசை நார்கள் தீயாகச் சுட்டுப் பொசுக் கின. பஞ்சும் தீயும் அல்லவா?-அதனுல்தான் அவள் விரல்கள் பஞ்சுக்கு ஒப்பானதோ? . பஞ்சும் தீயும் அல்லியும் மதியும் ஆயின. 'உடம்புக்கு என்னுங்க, அத்தான் #23 'உடம்புக்கு என்ன கேடு ?? ‘அத்தான் !' மே...க...லை !' 'உங்க மனசிலே...'