பக்கம்:வெண்ணிலவு நீ எனக்கு.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14| "இந்நேரம் என்ன செய்துகொண்டிருந்தீர்கள் ...' என்று கேட்டுக்கொண்டே குலோத்துங்கனை நெருங் கிளுள் மேகலை. அவன் கையில் இருந்த வெள்ளை அட்டையில் வரையப்பட்டிருந்த ஒரு சித்திரத்தை அவள் கூர்மையாக நோக்கினுள். "ஆமாம், யார் படத்தை வரைஞ்சுக்கிட்டிருந்தீங்க ? எங்க் சிந்தாமணி படத்தைத் தானே ? என்று பேச்சிலே விஷமப் புன்னகையைத் தெளித்துக் கேட்டாள். 'ஊஹாடும், சிந்தாமணி படத்தை எனக்குப் போடத் தெரியாது. நெஞ்சில் இருந்தால்தான் நினைவில் நிற்கும் ; நினைவிலே நின்ருத்தான் பென்சிலில் இறங்கும்...' என்று அசிரத்தையுடன் பதில் வைத்தான் குலோத் துங்கன். i; ஏதோ ஒரு சினிமாவில் காட்டிஞர்கள். மாபெரும் குற்றம் செய்த கிராதகன் ஒருவனைக் கொதிக்கும் எண் னெயில் தூக்கிப் போடும்ப்டி எமதர்மராஜன் தண்ட விதிக்கிருன். அப்படிப்பட்ட தண்டனையை அடைந் திருப்பதைப்போலத் துடித்தான் மாமல்லன். குற்றம் புரிந்தவன்தானே அதற்குரிய தண்டனையையும் அணுப விக்க வேண்டும் ? மேகலையின் சித்திரத்தை மட்டும்தான் உங்களுக் குப் போட்டுப் பழக்கம். ஏன், அப்படித்தானே, மிஸ்டர் குலோத்துங்கன் ?’ என்று நறுக்குத் தெறித்தாற்போல அவனிடம் கேட்டு, அவன் கன்னத்தில் முன்னறை பின்னறையாக நான்கு பரிசளிக்க வேண்டுமென்று அவன் தவித்தான். ஆனல்...! - “சரி, சரி. நீங்க போய்த் தூங்குங்க, பாவம் !! என்று விருந்தினருக்கு அறிக்கை சமர்ப்பித்தான் விருந்தளித் தவன. இந்திர நீலம் மேஜையைச் சுற்றிலும் ஒளியைப் பிரித்துக் கொண்டிருந்தது. - - - - உறக்கத்தில் மாமல்லனுக்கு விருப்பம் கனியவில்லை. அவன் விரும்பிய வகையில், கன்னிமரா நூல் நிலையத்