பக்கம்:வெண்ணிலவு நீ எனக்கு.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i-jū கள்ளமில்லா உள்ளம் கொண்ட மதலைச் செல்வம் அரும்புதிரச் சிரித்து, அச்சிரிப்பில் முத்துதிர்ந்து ஒலிப் பதை யொத்த பாணியில் மேகலை சிரித்தாள். ஆனல் அவள் குழந்தை அல்ல : "சிந்தாமணி, உங்க அத்தான் எவ்வளவு வருஷ மாக இப்படியே இருக்கிருங்க ?” எனக்கு விவரம் புரிஞ்ச காலந்தொட்டு !...” "தஞ்சாவூரிலே யாரோ டாக்டர்கிட்டே காட்டின தாகவும், குணம் ஏற்பட்டதாயும் எழுதினிங்களாமே?...' - என்ன வியாதியாம் : "எல்லாம் மூளை சம்பந்தப்பட்டது. மூளையைத் தாக்கிய அதிர்ச்சி ஏதோ ஒன்று அவர் மனசையும் தாக்கி யிருக்க வேணுமாம் : அந்த அதிர்ச்சி என்னவாம் ?? *அது அத்தானுக்குத்தானே தெரியும் ' "ஆமாம்......அவங்க சொல்லலையா? "ஊஹலிம்; நான் கேட்கலே : "சரி, நான் கேட்கட்டுமா ? . - "ஐயையோ, வேண்டாம், நீங்க கேட்க வேண்டாம், மேகலை !’ நான் என்றதும் ஏன் அப்படிப் பதறுறிங்க, சிந்தாமணி ' . "அப்படியொன்றும் நான் பதறலையே...!’ & "சிந்தழணி, வேதாளம் மறுபடியும்.முருங்கை மரத் தில் ஏறிக்கொண்ட மாதிரி உங்க அத்தானுக்குத் திரும்பவும் பழைய குழப்ப நிலை ஏற்பட்டிருக்குமேர், என்னவோ ? . . . . . . . . { ஆண்டவனுக்குத்தான் தெரியும், அண்ணி