பக்கம்:வெண்ணிலவு நீ எனக்கு.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

147 வில்லெடுத்து வேல் விழிக் கணை தொடுத்துக் கொண்டிருந்த மேகலையின் குறியை விட்டுச் சிந்தாமணி நூலிழை தப்பவில்லை. உற்றவள் வடித்த கண்ணிரின் பங்குக்கு, உரித்தான மேகலையும் விழிநீர் பெருக்கினுள். ஏதோ ஒரு திரைப் படத்தில் பார்த்த விசித்திரம்ான இயல்பு கொண்ட கதாநாயகனின் உருவமும் உள்ளமும் ஆவளின் நினைவுத் திரையில் ஓடின. உடல் நோய்க்குத் தின்று தீர்க்கவேண்டிய கசப்பு மருந்தை உள்ளங் கையில் வைத்துக்கொண்டே யோசிக்கும் பெதும் பையைப் போலிருந்தாள் அவள். 'நானல்லவா நாள் முச்சூடும் யோசித்து யோசித்து யோசித்து மூளையைக் குழப்பிக் கொள்ளணும் நீங்க ஏன் வீணு மனசை அலட்டிக்கிறீங்க என்ருள் சிந்தாமணி. "உங்க சந்தோஷத்திலே மட்டுந்தானு எனக்குப் பங்கு கொடுப்பீங்க ...உங்க சஞ்சலத்திலேயும்தான் எனக்குப் பாகம் வேணும் ' என்று எதிர்க் கேன்வி கேட்டு உரிமை கேட்டாள் மேகலை. 'அதுக்குத்தான் என் அத்தான் இருக்காங் களே ...' . அவங்களைப் பத்தித்தான் இப்ப நினைச்சுக்கிட் டிருந்தேன் ” . . நல்ல அண்ணன் ...நல்ல அண்ணி...:

பின்னே...!"

மேகலை எதிர்பார்த்ததுபோல சிந்தாமணி சிரித்து விட்டாள். பெண் அழகான அமைப்புடன் சிரிக்கப் பழகிக்கொண்டால், அப்புறம் அவளுக்கு இந்தப் புவனத்தையே காணிக்கை வைத்துவிடலாம் ப்ோலும்! ஆளுல் சிந்தாமணி சிரித்த சிரிப்பின் ஒய்யாரத்தை அனு பவித்து ரசிக்க அப்போது குலோத்துங்கன் அல்லவா பிரசன்னமாயிருக்க வேண்டும்? அவன் எங்கு சென் றிருப்பான் ?... . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .” -