பக்கம்:வெண்ணிலவு நீ எனக்கு.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 திருமண அழைப்பு ஒன்று இருந்தது. அதை எடுத் துப் புரட்டினன் மாமல்லன்; சித்திரப் பாலடை ஒன்றும் அவன் கண்களில் பட்டது. புதுமணத் தம்பதிகளுக்கு அவன் கொடுக்க எண்ணியிருக்கும் பரிசில் அதுதான் ! உடுத்து முடித்து, சீவிச் சிங்காரித்துக்கொண்டு. மேகலையும் சிந்தாமணியும் வந்து நிற்பதற்கும் வாசலில் பழி கிடந்த டாக்ஸி டிரைவர் ஒலி எழுப்பி நினைவுக் குறிப்பைத் தொட்டுக் காட்டுவதற்கும் சொல்லி வைத்த மாதிரி கணக்காக இருந்தது. r மாமல்லன் வெய்துயிர்ப்பை வெளியிட்டான். வாங்க அத்தான் ...நேரமாகல்லே ' நாற்பது நிமிஷங்களே நறுவிசாக எடுத்துக் கொண்டவள் எவ் வளவு நாசூக்காகப் பேசித் தப்பிக்கப் பார்க்கிருள் என் பதை எடை போட்டுங்கூடவா அவன் அசட்டையாகச் சிரித்தான் ? "உன் முகத்திலே தெளிவைக் காண முடியலேயே, சிந்தாமணி' வருந்தியது மனிதப் பண்பு. உறைந் திருந்த இடம், மாமல்லனின் இதயம். ஆறுதல் மொழி கேட்டதும், அடங்கிக் கிடந்த ஆருத்துயரம் பீறிட்டுக் கிளம்பியது. "அண்ணு, உங்க 2ள்த்தான் நம்பியிருக்கேன். நீங்கதான் என் அத்தானைக் கண்டு பிடித்துத் தரவேணும் ' என்று விம்மலாள்ை சிந்தாமணி. - . பொங்கி வரும் காவிரியின் புதுப்புனலை மாமல்லன் அனுபவிப்பதில் கைதேர்ந்தவன். ஆளுல் பொங்கி வரும் கண்ணிரைக் கண்டால் அவன் கோழையாகி விடு வான். இடைவேளையில் எதுவுமே நிகழாதது போன்ற தொரு நினைவின் உணர்வு அவனுடையரத்த நாளங்கள் ஒவ்வொன்றிலும் உரைந்தது குலோத்துங்கனை அவள் வசம் ஒப்படைப்பதாக உறுதி மொழிந்தான் அவன். o மூவரையும் மணவிழாப் பந்தல் வரவேற்றது.