பக்கம்:வெண்ணிலவு நீ எனக்கு.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 சிந்தாமணியின் போட்டோ இங்கே எப்படி வந் தது? ஏன் வந்தது என்று தனக்குத் தானே விளு விடுத்தான் மாமல்லன். அவனுக்குப் பதில் இசால்ல விண்ணிடை வெண்மதிக்குப் பேசத் தெரியாதே, பாவம்...! 3 1 நெரித்த திரைக்கடலில் என்ன கண்டிட்டாய்? நூல் நிலையத்துக்குப் புறப்பட்டான் மாமல்லன். அந்த மாதத்தில் அவன் எடுத்துக்கொள்ள உரிமை கொண்ட விடுமுறை நாள் ஒன்று எஞ்சி நின்றது. கடற்கரை ரெயில் நிலையம் அவன் குறிப்புக்கு எல்லேக் கல்லானது. வீட்டைவிட்டு நடந்து இருபது. இருபத்தைந்து அடி தூரம் நடந்திருப்பான். தீனக் குரலொன்று காற்றில் அலேந்து வந்தது அது அவனிடம் ஒரு சேதி சொன்னது. தெருவின் கோடியில் அவன் நின்ருன். சிந்தாமணி ஏன் அழுகிருள்?" ஒரு கேள்வியிலிருந்து பத்துக் கேள்விகள் உதிர்ந் தன. - - என் அன்புக்குகந்த மேகலை மாதிரி சிந்தாமணியும் தங்கமான பெண் ; தங்கமான மாப்பிள்ளை கிடைக்க வேண்டும். ஏழைத் தொழிலாளியின் மகள் 1 -வட துருவத்தில் நின்ருன் அவன். - அதே சமயத்தில், தென் துருவம் கூவிக்கூவி அழைத்தது; திரும்பியபோது, இரவில் கண்ட சிந்தாமணி யின் புகைப்படம் நினைவுக்கு வந்தது. விளக்கம் கேட்க