பக்கம்:வெண்ணிலவு நீ எனக்கு.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 அவன் பிள்ளைக் கனியைக் கை நீட்டி வாங்கியபோது, மர்மல்லனின் வலது கை விரல்கள் மாதவியின் தாலிச் சரட்டில் பட்டு விலகின; மின் அதிர்ச்சி அடைந்தவ ளுகத் திணறினன். மேலையின் கண்கள் தன்மீது பதிந்திருந்ததைக் கவனித்த அவனுக்குச் சப்த நாடி களும் ஒடுங்கிவிட்டன. பேசும் பொற்சித்திரத்தை வாங்கி ஆயிரம் முத்தங் கள் பதித்தாள் மேகலை தன்னைப்பற்றி எண்ணியதும், தன் வயிற்றுக் குழந்தை சிரிக்க ஆரம்பித்தது. இன் னும் கொஞ்ச நாட்கள் கழிந்துபோனல், என் கவலைக் யெல்லாம் மறக்கடித்துவிடும் என்னுடைய குழந்தை : ஊருக்குப் புறப்படுவதற்கு முன் தன் வீட்டில் ஒரு வேளை விருந்து உண்டு செல்லுமாறு கேட்டுக்கெரின் டாள் மேகலை. மாதவியும் சம்மதம் கொடுத்தாள். சிந்தா மணியும் மாதவியுடன் சிறுபொழுது உரையாடினுள். இரவு படுக்கையில் சாய்ந்திருந்த மாமல்லன் பாரதி யின் பாடல்களைப் புரட்டினன். தின்ன வரும் புலியானு லும் கூட அதைச் சிந்தையிலேற்றி அன்பு பாராட்ட வேண்டும் ! என்று உபதேசம் செய்திருந்ததைப் படித்தபோது, குலோத்துங்கன்தான் நெஞ்சடியிலிருந்து எழும்பிஞன். குலோத்துங்கனும் மேகலையும் சிறு வயதில் ஒன்ருக இருந்து எடுக்கப்பட்ட புகைப்படம் நினைவுக்கு வந்தது பதறிஞன். முதல் சலனம் அதுதான் !.. மாதவியும் தானும் இருந்த நிழற்படத்தை ஒரு சமயம் மேகலை நீட்டிய சம்பவத்தையும் எண்ணத் தொடங் கின்ை. கனவில் கண்ட மாதவியின் எழில் அவனுள் சலனம் உண்டாக்கியது; புலனடக்கத்தை அவன் பழக வில்லை. ஆகவே, மேகலையைத் தேடிச் சென்ருன். அவள் நிலை மறந்த தூக்கத்தில் ஆழ்ந்திருந்தாள். அவளருகில் நடந்து சென்றபோது, அவளது அறை யில் ஒரு பிரயாணப் பை இருந்ததைக் கண்டான். குலோத்துங்கனின் பெயர்ச் சீட்டு காணப்பட்டது. அவ சரம் அவசரமாக அதைப் பிரித்தான் மாமல்லன். பாம்பின் வாய்க்குள் கையை நுழைத்து விட் டானே ?...இமைச் சிறகுகள் கண்மூடிக் கண் திறந்தன.