பக்கம்:வெண்ணிலவு நீ எனக்கு.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 களில் சிக்கியவன் போன்றே அவதிப்பட்டான்; அல்லல் அனுபவித்தான் ; முத்துக் கண்ணிர் உயிர்ச்சத்தை வடித்தெடுத்து, விழி பிதுங்க வழிந்துகொண்டே யிருந்தது. வெறுங் காகிதக் கற்றைகளில் நாணய மதிப்பை உள்ளடக்கிக் கொண்டிருந்த பத்து ரூபாய்த் தாள்கள் அவனுடைய கண்ணிர்த் துளிகளை ஏந்திக்கொண்டன : பிரிந்த நாட் குறிப்பின் ஏடுகள் பிறந்த கன்முத்துக் களைச் சேகரம் செய்தன ; உறை உதறிய நிழற் படங் களில் அங்கங்கே சொட்டு நீர் முத்திரை பதித்தது. மாமல்லன் விம்மினுன் ; விம்மல் வெடித்தது. விம்மல் வெடிப்பதைப்போல என் நெஞ்சும் வெடித்து விட்டால், நஞ்செனப் பரவி மண்டை கொண்டு விட்டிருக் கும் சஞ்சலம் என்னுடனேயே அழிந்துவிடுமே ! என் னும் நினைவு சுய உருக்கொண்டு எழுந்தது. அவன் இப்போது வாய்விட்டு அழுதான் ; மேகலை, நீ ஏன் இப்படி என்னைச் சித்திரவட்ைபடுத்துகிருய் ? என்று கேட்டான். "அத்தான் #33 மேகலை படுக்கையைவிட்டு எழுந்தாள் ; தோன்றி. ளுள் ; விஞ அனுப்பிய வாய்க்கு விடை கொடுக்க வந்திருக்கின்றனளோ? - மாமல்லனின் ஈரல் கலங்கிற்று. காற்றடைத்த இதயப்பை சுருங்கியது. எல்லாவற்றையும் இருந்தது இருந்தபடியே வைத்துவிட்டான். குலோத்துங்கனின் உடைமையான பிரயாணப்பை களங்கம் காட்டாமல் சிவனே யென்றிருந்தது...! கெடியாரத்தின் பெண்டுலம் டக் டக் என்று நாதம் இசைப்பதற்குக் காரணம் இருக்கிறது ; அதன் கடமை யுனர்வை சொந்தக்காரர்களுக்குத் தெரிவிக்க வேண்டும். ஆளுல், மனித மனமும் கடிகாரத்தைப்போலவே டக் டக் என ஏன் பாவனை காட்டுகிறது?...ஏன் இந்தப் பொய் வேஷம் ? மனச்சாட்சியின் கண்ணே மறைக்க்வா ? இல்லை, அதன் கண்ணிலே மண்ணை அள்ளி வீசவா?