பக்கம்:வெண்ணிலவு நீ எனக்கு.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

157 சரி, கண்களைத் துடைத்துக் கொள்ளுங்கள். வழக்கு உரைகாதை இத்துடன் நிற்கட்டும். வாருங்கள். மனையறம் படுத்த காதை ஆரம்பமாகட்டும் !" மாமல்லன் இமைகளை விலக்கி விலக்கி மூடினன். வீரக் கண்ணகியின் வடிவம் சாந்தியுடன் திகழ்வதைப் பார்த்தான். குழப்பத்தை இருந்தவிடந் தெரியாமல் மறைத்தது அவளது அந்த இன்ப ஸ்பரிசம். தொட்ட விரல்களில் மணம் நின்றது; பட்ட இடத்தில் தேன் துளி இருந்தது ; ஜாதி மல்லியின் கற்பு மணம் அவன் மண்டையில் கிறக்கத்தை வளர்த்தது. ஆடும் பதுமையென மேகலை ஆட்டுவிக்கப்பட்டாள்! பாவம் ! •3 . . . துரியோதனனின் மனயாட்டி . பானுமதியுடன் தேரோட்டி மகன் சொக்கட்டான் விளையாடிக் கொண் டிருந்தான். தன் கணவன் வருவதறிந்த பானுமதி மரியாதை தரும் பொருட்டு எழுந்தாள். இதை அறியாத இந்திமைந்தன், அவள் ஆட்டத்தின் நடுவே எழுந்து செல்வதாகத்தவருது உணர்ந்து, அஸ்தினுபுரத்துப்பட்ட் மகிஷியின் பொற்றிரு மேகலையைத் தொட்டிழுத்து, விளையாட அமருமாறு கோரிஞன். மேகலை முத்துக்கள் தரையில் சிதறின. - தவழ்ந்த முத்துக்களில் கண் பதித்து விலக்கி, அவற்றின் புன்னகையைத் தன் இதழ்களில் சேர்த்து விட்ட பெருமையுடன் திடப்படுத் திட வேல் இராசரா சராம் துரியோதனன் நின்ருன். பாவம் புரிந்தேனே? என்ற பயம் அங்கபூபதியின் முன்னே பாம்பெனப் படமெடுத்தது. " கர்ணு! ஏன் அப்படி நிற்கிருய்?...மேகலை மணிகளை நான் எடுத்துக்கொடுக்கட்டுமா? அன்றி கோத்துத் தரட்டுமா?’ என்று பகன்ருன் வணங்காமுடி மன்னன், - - . பரரதக் காட்சி கலந்தது. - . . . விட்டு விலகிய பள்ளிப் பாடத்தைக் கூட்டி வைத்து