பக்கம்:வெண்ணிலவு நீ எனக்கு.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 எண்ணிப் பார்த்தான் மாமல்லன்; அவன் நெட்டுயிர்ப்புக் கொண்டான். வீறு கொண்டு வழக்காடிய மேகலையின் துடிப்புப் பேச்சு குரல் கொடுத்தது ; அச்சம் அப்பிய முகத்திலே தென்பட்ட அவளது அபலைத் தன்மை புலளுனது ஐம்புலன்கள் தாம் இழந்த அறிவை மீட்டுக் கொண்டதெனச் சாற்றின. முகத்தைத் துடைத்துக் கொண்டு மெத்தையில் சாய்ந்தபடி, குலேத்துங்கனின் பையை நோக்கிளுன் அவன்; சடுதியுடன் எழுந்து விரைவுடன் அவ்விடத்தை நாடிஞன். பை இருந்தது : ஆளுல் முன் நாள் இரவு அவன் மனத்தைக் கெடுத்த மூன்று பொருள்களும் காணப்படவில்லை. நேற்று விளைவிக்கப்பட்ட துயர நிலை மீளவும் அவனை ஆட் கொண்டது; அலைக்கழித்தது; ஆலைக் கரும்பான்து இதயம் ; சுடு புலஞனது நயன வட்டம். வான் கண் விழித்தது. மாழல்லன் படி அளக்கும் படி மிதிக்க ஆயத்தப் பட்டுக் கொண்டிருந்தான். அப்பொழுது மேகலை காப்பிப் பலகாரம் கொண்டு வந்தாள். அரிச்சுவடி படிக்கும் சிறுவன் ஆசானைப் பார்த்துப் பயப்படுவதை யொப்ப அவன் பயப்பட்டான் , தீமை புரிந்த பூபாலன் நல்லது புகட்டும் அமைச்சரின் நிழல் பட்டதும் அஞ்சியொடுங்கு வதைப் போன்று உடல் நடுங்கினுன் இருந்த இடத்தை விட்டு எழுந்தான் அவனை அறியாமலேய்ே நடந்த நடப்பு இது. அவன் தாலி பாக்கியம் பெற்றவளே ஏறெடுத்துப் பார்த்தான். அவன் பார்வையில் மேகலே தென்படவில்லை. தெய்வத் தமிழ் மறையை உலகுக்கு அருளிய திருவாதவூரர் தோன்றிஞர்; அன்னுருக்கு அருளிய நமச்சிவாயம் தோன்றினுன் தெய்வத்திருச் சந்நிதானத்திலே தன் தந்தை வாய்விட்டுப் பாடும் திருவாசகம் அவனுடைய உதடுகளில் ஏடு புரண்டது. தாய் ஆய் முலையைத் தருவானே, . தாராது ஒழிந்தால், சவலையால் நாயேன் கழிந்து போவேனுே நம்பி, இனித்தான் நல்குதியே!