பக்கம்:வெண்ணிலவு நீ எனக்கு.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15 வேண்டுமென்றிருந்தான் அன்னையிடம் , மறந்து போளுகன். படிக்க எடுத்துச் சென்றிருப்பார்கள். சரி ஒரு வேளை, அவர்கள் தன் போட்டோவை மறந்துபோய் புத்தகத்தில் வைத்திருப்பார்களோ ?. அப்படியானல், மேகலேக்கு எழுதிய தபாலில் சேர்க்கப்படாத அக் கடிதத்'தையும் பார்த்திருப்பார்களே ; படித்திருப்பார் 3 களே !’ குழப்பம் ஒரு பேய் அது தலே விரித்தாடியது. பேயை விரட்டும் பூசாரியாக வேடம் புனையும் சாகலம் இந்த மனத்திற்கு எப்போதுமே கைகூடி வருமென்று உத்தாரம் சொல்ல இயலாது. . நிகழ்ச்சி ஒன்றின் இருதயப் பகுதி அது. அவனது இருதயம் அடித்துக்கொண்டது மாமல்லனின் தாயாருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டிருந்தது. ஒடியாடித் திரிந்து பணிவிடை செய் தான் அவன். டாக்டரின் ஆலோசனைப்படி பத்தியம் : வைத்துக் கொடுக்கவேண்டும் ; காண்டிப்னுக்கு வழி காட்ட ஒரு கண்ணன் கிடைத்தான். அது புராணகாலம். ஆளுல் இப்போது மாமல்லனுக்கு உபாயம் கூறக்கூட ஒல் உள்ளம் தட்டுப்படவில்லை. இப்படிப்பட்ட ஏக் கத்தில் அவன் தன்னையே இழந்து விட்டிருந்த தருணத் தில்தான், கண்ணன் அனுப்பிய ஆதரவு போலே சிந்தா மணி வந்தாள் ; ஆவன செய்தாள். படுத்த படுக்கை யான கோசலை அம்மாளே, படுக்கையில் அமர்த்தினுள் அந்தப் பெண் ; நன்றி தெரிவித்த உள்ளத்திற்கு இது என் கடமை என்ற பண்பாடு பதிலிறுத்தது. மனித மனம் மெல்ல விழித்தது. " சிந்தாமணி...!. . ' துறைமுகத்திலே அப்பாவுக்கு அடிபட்டிடுச்சாம் ; மூட்டை தூக்கி வருகிறபோது, கால் தடுக்கி விழுந்திட் டாங்க துடிக்கிருங்க வயசுக் காலம் வேறே...நீங்க தயவு செய்து டாக்டர் யாரையாச்சும் அழைக்கிறீங் களா?...'