பக்கம்:வெண்ணிலவு நீ எனக்கு.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

159 தாயே என்று உன் தாள் அடைந்தேன் ; தயா, நீ, என்பால் இல்லையே? நாயேன் அடிமை உடன் ஆக ஆண்டாய் ! நான்தான் வேண்டாவோ? பதினெட்டாம் பெருக்குக் காவேரி வெள்ளம் நுங்கும் நுரையுமாக வருமல்லவா ?- அப்படி இருந்த மாமல்லனின் உள்ளம் சற்றைக் கெல்லாம் தெளிந்தது. அரியலூர் வாசத்தின் போது வழிபட்டுக் கை தொழுத கலிய பெருமாள் கடவுளும், மங்காவிப் பிள்ளையாரும் அவன் கண்முன் காட்சிப் பொருள்களாக மாறி மறைந்தனர். மாற்ருன் மனைவியைத் தொட்டு விட்ட பெரும் விழையைப் புன்னகையால் மன்னித்ததோடல்லாமல், அங்கபூபதிக்கு ஆதரவு மொழி உரைத்த கவுரவர் முதல்வனின் பெருந்தன்மையை-விரிந்த இதயத்தை மாமல்லனுல் இப்போதுதான் போற்ற முடிந்தது. அக் கணத்திலே, தன் உயிருக்கும் தன் மனைவியின் உயிர்ப் புக்கும் ஊடே உண்டான மாயப் பெரும் அகழியைச் சிந்தனைப் பள்ளத்தில் லயித்திருக்கச் செய்து அவன் அதில் அழுந்தி திக்குமுக்காடிஞன். குலோத்துங்கனும் மேகலையும் அருகிருந்து எடுக்கப்பட்ட பிஞ்சுப் பிராயத் துப் படத்தை வைத்துக் கொண்டு இத்தனை நாட்களும் நான் குழம்பியது என் தப்புத்தானே ? என்று உளம் உருகிஞன். திருவாசகத்தின் நற்பலன இம்மாற்றம்...? அப்போது

  • அத்தான், என்று அழைத்த வண்ணம் பலகாரத் தட்டையும் காப்பி டபராவையும் ஸ்டூலில் வைத்தாள் மாமல்லனின் உயிர்ப் பத்தினி. வந்து நின்ற சில கணப் பொழுதுக்குள்.அவளது கண் பார்வையில் சுழலச் செய்த உயிர்த் துணையின் உணர்ச்சி வசப்பட்டிருந்த உரு வத்தை மறுமுறை நோக்கினுள். அமைதி கனிந் திருந்தது ; ஆறுதலுடன் கூப்பிட்டாள் அவள்.