பக்கம்:வெண்ணிலவு நீ எனக்கு.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

161 தொண்டைக்குள் திணித்தான். குலோத்துங்கனின் நினைவு அவனுடைய ரகசியப் பை'யை அழுத்தி விட்டது. * அத்தனை பணமும் ஏது? டைரியில் என்ன எழுதப்பட்டு இருக்கும் ? புகைப்படங்கள் என்னென்ன ?...ஆமாம் ; அந்தப் பை எங்கே? மேகலைக்கு சர்வ நிச்சய்மாகத் தெரியாமல் இருக்கமாட்டாது; கேட்கலாமா? என்று. மூளையைக் குழிப்பினன். அதற்குள் நிகழ்ந்தது :

  • அத்தான், என் தோழிக்கு விருந்து வைத்தோ மில்லையா, அப்போது உங்களைப் பத்தி ரொம்பவும் உயர் வாகச் சொன்னுள். திருச்சியில் படிச்சிக்கிட்டிருக் கையிலே உங்களோட சேர்ந்து நடிச்சாளாமே ?...நான் இருந்த போத்தான் நீங்க அவளோடு சரியாகப் பேசலை யாம் : மற்ற நேரத்திலே செளஜன்யமாப் பழகினிங் களாம். மாதவி சொன்னுள். உங்க நண்பர் கல்யாணத் தன்னிக்குக் கூட அவள் குழந்தை உங்ககிட்டே எவ் வளவு ஒட்டுதலாயிருந்துச்சு சின்ன வயசிலே பழகுகிற தினுலே உண்டாகிற சிநேகிதத்தின் மகிமையே அலாதி தான். இல்லீங்களா?' என்று மென்னகை பயின்ருள்

மேகலை. சினம் காட்டினுல், தம் பலத்தில் பேர்பாதி எதிரியைச் சார்ந்து விடுமென்ற நிலையில் சிரித்து எரித்த விரிசடைக் கடவுளின் செயலைச் சாகலம் என்றுதான் தீர்மானிப்பவன் மாமல்லன். ஆனால், பிறிதொரு சமயமாயிருந்தால். மேகலை இவ்வாறு சிரித்ததற்கு அவன் புதுக் காரணம் கற்பித்துக் கொண்டிருப்பான்; சித்தம் பேதலித்திருப்பான் ; இப்போது அவள் காட்டிய வண் பவளப் புன்முறுவல் அவனுடைய உந்திக் கமலத்தைத் துளைத்தெடுத்தது; குலோத்துங்கன்மேகலை ஒன்ருகக் காட்சி தந்த அந்தப் புகைப்படம். குலோத்துங்கன் முல்லைத் துறையிலும், மற்ற இடங் கிளிலும் கிருக்கியிருந்த கோட்டுருவச் சித்திரங்கள், குலோத்துங்கனின் பரிசுப் பொருளாகத் தலை காட்டிய தங்கச் சங்கிலி ...... எல்லாவற்றைப் பற்றியும் ஒரே மூச்சில் பட்டவர்த்தனமாகக் கேட்டு விடை தெரிந்து