பக்கம்:வெண்ணிலவு நீ எனக்கு.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 ஒலி அலை தேய்வதற்குள், படித்த எம். பி. பி. எஸ். பட்டங்களுடன் நாடிக் குழல், ஊசி வகை, மருந்து முதலியன சுமந்து டாக்டர் ஒருவர் வந்தார். நல்லது செய்து நடு வழியே போளுல், பொல்லா தது போகிற வழியே போய்விடும் ' என்பது மாமல் லனின் சித்தாந்தம். ஆனல், அன்றைக்கு என்னவோ அவன் நினைப்பு நல்ல ப்லன் காட்டவில்லை ; நடு வழியே சென்றவன் நல்லது செய்தான் ; ஆனல் பலன்தான் நல்லதாக உருப்பெறவில்லை. டாக்டர் தன் மண்டையை உருட்டிக் கொண்டார். வெளிப்படையாக ; இளைஞனின் தலையை உருட்டிவிட்டார், ரகசியமாக ; ரத்த் இழப்பைக் காட்டிப் பயமுறுத்தினர். சிந்தாமணி பயந்தாள். ' ஐயோ, நான் அபலையாகி வி டு வே னு ? ஆண்டவனே, எண்னை அளுதையாக்கிவிடாதே, தாய் இல்லாப் பெண்ணுக்குத் தகப்பனையாவது ஆதரவுக்கு விட்டுவைத்து விடு. மலை ஏறி வந்து உனக்கு அர்ச்சனை செய்கிறேன்...! - மலைக்கோட்ட்ை உ ச் சி ப் பி ஸ் ளே யாரை வேண்டினுள் சிந்தாமணி. பூரணமாகத் தேய்ந்துவிட்ட இசைத்தட்டின் மெலிந்த ஓசையை விட மோசமாகயிருந்தது துறைமுகத் தொழிலாளி வேலாயுதத்தின் கூப்பாடு. - ஒடினவள் மகள். நெற்றிமேட்டில் கை வைத்துப் பார்த்தாள். தந்தையின் கண்ணிர்த் துளிகளைத் துடைத்து, அவற்றைத் தன் விழிகளில் நிறைத்தாள். மகளின் முகத்தைக் தடவிக்கொடுத்தவாறு ஏதோ பேச எண்ணியவராக கிழவர் வாயை அசைத்தார். அழுகை தான் புறப்பட்டது; வார்த்தைகளை யல்லவா அவள் எதிர் பார்த்தாள் ? பெண் தன் கண்களுக்குக் கறுப்பு மை யிட்டால் பார்த்தப் பரவசம் தருகிறது. ஆனல் வான மடந்தை இம் மாதிரி மை பூசிக் கொண்டால், ஏன் உலகம் அப்படிப் பயந்து சாகிறதாம்...? . * “ அம்மா...அம்மா!...”