பக்கம்:வெண்ணிலவு நீ எனக்கு.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17} மேகலை ! ஒடிப் பிடித்து நாம் இருவரும் விளே யாடினுேம், அப்பொழுது நீ தொட்ட இடம் இன்னும் என் மணிக்கட்டுகள் இரண்டிலும் புதுமணம் கூட்டித் திகழ்கிறது. என் கைதொட்ட உன் உள்ளம் இன்றள விலும் என் இதயமெங்கிலும் இடைவெளி ஏதுமின்றி எதிரொலி செய்கிறது. என்னையும் அறியாமல் என்னுள் நீ வளர்ந்துவிட்டாய்; என்னேயும் மீறி உன் நினைவு என் நெஞ்சத்தில் நிலைத்துவிட்டது. பட்டணத்தில் என் முறைப் பெண் சிந்தாமணியின் வீட்டில் நான் இருந்தபோதெல்லாம், உன் இன்ப நினைவு ஒன்றே தான் எனக்கு ஆறுதலாக அமைந்தது. அது ஒன்றே என்னை வாழ வைத்தது. ஆளுல் நாளா வட்டத்தில் என்னில் நீயாகவும், உன்னில் நாளுகவும் கூடுவிட்டுக் கூடு பாய்ந்த விசித்திரமான நிலை வலுக்கத் தொடங்கி விட்டதே!...உன்னே எங்கெங்கோ தேடியலைந்தேன் ; தேடி அலுத்துப் போய்விட்டேன். ஒரு முறையாவது நான் உன் முகதரிசனம் காணமுடியாதா?...' ‘ஹஹஹா ! என் மேகலையை வேருெருவன் அபகரித்துக் கொண்டானே ?... அரியலூர் என்ற பெயர், சித்தம் குலைந்த என் சித்தத்தில் முன்னமேயே தோன்றி யிருக்கலாகாதா? மேகலை ! நீ எங்கே போனுல் என்ன ?... என்றென்றும் நீ என் மனக்கோயிலில் கொலு வீற்றி ருக்கும் கண்கண்ட தெய்வம்.” "ஐயோ மேகலை மாற்ருன் மனையாட்டியாயிற்றே?... அவள் நினைவில் மனம் பேதலித்துத் திரிவது பெரிய தவறு; தெய்வமே, மனத்தால் பிற பெண்டிரை நினைத்தல்கூட பாவமென்கிருர்கள். மேகலை, நீ ன் என்னை பைத்தியமாக்குகிருய் விட்டகுறை தொட்ட குறையா? ஆண்டவனே, என்னை மன்னித்து விடு.' ‘என்னிடம் அத்யந்தமான பாசமும் அன்பும் பூண்டி ருக்கிற மாமல்லனின் துணைவி மேகலையின் கையால் அவள் பிறந்த மனையில் காப்பி வாங்கிக் குடித்தேன். இன்றைக்கு என் வாழ்விலே ஒரு திருநாள் போல. உனக்குக் கல்யாணப் பரிசு தர ஆசைப்படுகிறேன். உன் சங்கிலியைக் கொடு!" என்று ம்ேகலையிடம் கேட்டு