பக்கம்:வெண்ணிலவு நீ எனக்கு.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 கட்டிக் கொண்டாள். மண்ணெண்ணெய்ச் சீசா காலி யான்து. சேலே நனைந்தது. தீ எறியத் தலைப்பட்டது. முழு முதற் கடவுளே, என் அன்பு அத்தான் எனக் குக் கிட்டாமலிருந்திருந்தால், என்றைக்கோ நான் மண் ளுேடு மண்ணுகி விட்டிருப்பேன். ஆளுல், என் ஆசை அத்தான் கிடைத்தும், இன்று அவர்ைப் பிரியவேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுவிட்டது. நானும் என் கணவரும் ஒருயிராக நிலவ எண்ணினுேம் ; ஆளுல் விதி எப்படியோ’விளையாடி விட்டது. இப்பொழுது ஈருடலை நான் ஒருத்தி சுமந்துகொண்டு பிரியப் போகிறேன். மஞ்சள் குங்குமத்துடன் பூவும் புன்னகையும் மிளிர எனக்கு விடுதலை கிடைக்கப்போகிறது. கடைசி வரை அயோத்தி சாமர் நெஞ்சில் சீதை இடம் பிடித்துக் கொண்டதுபோல, என் பிராணநாதரின் நினேவிலும் இதயத்திலும் எனக்கு ஓர் இடம் அளிக்க கருணைபுரி, தெய்வமே ! - மேகலை !...மேகலை !' மாமல்லன், கோசலை அம்மாள், சிந்தாமணி மூவரும் ஓடி வந்தார்கள். மேகலை பிழைத்தாள் ; பிழைத்தது மறு பிழைப்பு. அவள் படுக்கையில் கிடத்தப்பட்டிருந்தாள். கை விரல்கள் பத்திலும் நெருப்புப் பொக்களங்கள் ; காற் பாதங்களின் முன் பகுதிகளில் ரத்தம் கன்றிய சிவப்பு ; அவன் வாய்விட்டு விம்மிக் கொண்டிருந்தாள். கண்களில் அணை கடந்த வெள்ளமும் இதயத்தில் ஆருத கண்ணிரும் சூழ அமர்ந்திருந்த மாமல்லன் அவ. ள்து நெற்றிப் பொட்டைத் தடவிக் கொடுத்த வண்ணம் இருந்தான். - மேகலை, ஏன் கண்ணே அப்படிச் செய்யத் துணிந் தாய் ... என்னுடைய புத்தி கெட்ட செயலுக்கு நீ எனக் குப் பாடம் படித்துக் கொடுக்க எண்ணியா உன்னையும் உன் செல்வத்தையும் நீ அழித்துக்கொள்ள பிரயத்தனப் பட்டாய் 1.ஐயோ, இன்னும் ஒரு கணம் தாமதித்து தான் தீப்பிழம்பின் சுடரொளியைக் கண்டிருந்தால்கூட,