பக்கம்:வெண்ணிலவு நீ எனக்கு.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

175 உன்னை நான் உயிருடன் கண்டிருக்கமாட்டேன்?... அரியலூரில் என் கண்ணிரைத் துட்ைத்த புனிதவதியா யிற்றே நீ! என் கனவுகளைக் காத்து, உன் ஏழை அத்தா னுடன் வாழத் துணிந்து உன் பெருந்தன்மையை நிரு பித்துக் காட்டி என் மனத்தவத்தைப் பலிக்கச் செய்து ரட்சித்த மகேஸ்வரியும் நீ தானே ! ...என் எண்ணங் களின் குழப்பங்கள் காரணமாக சலனமடைந்த என் மனம் உன்னைத் தவருக எண்ணியதற்குத்தான் நீ தீக்குளி நடத்தினுயா?.உன்னில் நானுக இயங்கிஎன்னில் நீயாக என்னை இயக்கி-காதலே கனிவாகவும், கனவே காதலாகவும் உருமாறி, தெய்வத்தின் சம்மதம் பெற்று இன்ப வாழ்வு தொடங்கிய எனக்கு நீயே தெய்வமாதித் தோன்றிய்ை ; நான் நினைத்ததையே ஐயனும் நினைத்த விந்தை என் வாழ்வில்-நம் வாழ்க் கையில் ஓர் அதிசயம் என்பதை வரம்புக் கட்டிப் பார்க் கும் பேர்தெல்லாம் விதியையே வென்றுவிட்ட் மாதிரி ஓர் இறுமாப்பு என் ரத்த நாளங்களில் உறைந்தது. மனிதன் கண்ட கனவு நூற்றுக்கு நூறு வெற்றி பெறுவ தென்ருல், உண்மையிலேயே மாபெரும் சாதனை தானே ? அந்தச் சாதனைக்குத்தான் சோதனை விளைந்தது போலும் ...'குலோத்துங்கன், ஓர் அரைப் பைத்தியம் என்ற நிலையை எண்ணி அவன்ே மன்னிக்க ஒப்பவில்லை என் மனம். எனக்கு ஒருவனுக்கே ஏகபோக உரிமை பூண்ட் உன்னைப்பற்றிய் நினைவில் அலைந்த அந்நியனை கைலாசத்துக்கு வழி யனுப்பி வைக்கவும் துணிந்தேன். என் உயிரை சோதிக்க இவனுக்கு ஏது உரிமை ... மஹாபலிபுரக் கடற்கரைக் கோயிலொன்றிலே வரையப் பட்டிருந்த பெண் சித்திரத்துக்குக் கீழே மேகலே' என் றும் குலோத்துங்கன் எனவும் இருக்கக் கண்டதி லிருந்து நான் உன்னிலிருந்து விடுதலை பெறவும் துணிந்தேன். நீ இதை அறியமாட்டாய் ! நீயும் குலோத் துங்கனும் சிறு வியதில் எடுத்த படம் அவன் கையில் இருக்கக் கண்டபோது நான் அடையாத வேதனை மகா புலிபுர விஜயத்தில் இரட்டிப்பானது. நான் உன்னை அடைய வேண்டுமென் தயாரித்திருந்த திட்டத்தில் விதி பாவலா காட்டியபோது, எழுதிச் செல்லும் விதியின்