பக்கம்:வெண்ணிலவு நீ எனக்கு.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17 ' என்ன அப்பா...நீங்க எதுக்கு கண்ணிர் விடனும் ...உங்க மகள் நான் இருக்கேனே ! இதயம் இருக்கிறவங்க மத்தியிலே, பண்பு காட்டுறவங்க இடை iயிலே கன்னிப்பெண் ஆலுைம், நான் கண்ணியமாக வாழ முடியும் ; உங்களையும் காப்பாத்த முடியும்...நாலு எழுத்து சொல்லிவைச்சிங்களே, அது இனியாச்சும் உபயோகப்படட்டும்...நீங்க அ ழா தீ ங் க... அப்பா... அழாதீங்க ...” “ அம்மா, உன்னே அளுதை..." வேலாயுதத்தின் உதடுகளை மூடினுள் பெண். " நான் அளுதையாக மாட்டேன், அப்பா!' என்ருள் அவள் அவளுடைய பார்வை அறைச் சுவர்களுக்கு நடுவில் சுற்றி விளையாடியது. மாமல்லனின் சிந்தை திக்குத் தெரியாத காட்டிலே அலைந்து கொண்டிருந்திருக்க வேண்டும். ஆளுல் அவன் வேலாயுதத்திற்கு வேண்டியதைச் செய்து கொண்டுதான் இருந்தான்.

  • சிந்தாமணி, உன்...”

தொடர்ந்த பேச்சுக்குத் தொடர் பிணைக்க வாய்க்க வில்லை. " பேசாதீங்க...அப்பா !” உதடுகளுடன் கண்களையும் மூடிக்கொண்டார் கிழவர். - " பயப்படாதீர்கள். பெரியவர் சற்று நேரம் ஓய்வு எடுத்துக் கொள்ளட்டும். இப்போது நீங்களும் ஒன்றும் பேசாதீர்கள். அவரையும் பேச விடாதீர்கள். மிகவும் களைப்புடன் இருக்கிருர். நாளைக் காலையில் மறுபடியும் நானே வந்து பார்க்கிறேன் ” என்று விடை பெற்ருர் A-ss &#-ss a - - - வேலாயுதத்தின் தலைப்பக்கம் மாமல்லனும், கால் பக்கம் சிந்தாமணியும் உட்கார்ந்திருந்தார்கள், குனிந்த தலை நிமிராமல் இருந்தான் அவன். வழிந்த நீரை வழித்துவிடாமல் இருந்தாள் அவள். - *