பக்கம்:வெண்ணிலவு நீ எனக்கு.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 வியன் வெளியில் விரித்த சடா மகுடம் தாங்கிய பயங்கர அருவம், கேட்போர் பதைக்கும் சிரிப்பு ஒன்றை அஞ்சல் செய்தது. அதற்குத்தான் விதி' என்ற பட்டப் பெயரோ...? சிந்தாமணி அழுகையை நிறுத்தியதுதான் தாமதம், கிழவரின் மூச்சே நின்றுவிட்டது ! சிந்தாமணிக்கு அடைக்கலம் அளித்த பெருமை கோசலை அம்மாளுக்கே உரியது. பஞ்செனப் பஞ்சை யுள்ளம் பரதவித்துக் கொண்டிருந்தது. நெருப்பில் இருப்பது போன்ற ஓர் உணர்வு மாமல்லனுக்கு எழுத் தது. பஞ்சு, நெருப்பு-இவ்விரண்டின் கதையை ஊர் -உலகம் நன்ருக அறியும். கோசலை அம்மாள் அறிவாள் ; மாமல்லன் அறிவான். ஏன், சிந்தா மன்னியும் அறிவாளே ! அலுவலகம் சம்பந்தப்பட்ட ஐந்தாறு நாளேய வெளி ஆர்ப் பயணம் முடிந்து அன்றைக்குத்தான் மாமல்லன் வீட்டிற்கு வந்தான். சிந்தாமணியின் மனநிலை பற்றித் தாயிடமிருந்து கேட்டறிந்தான். அவன் அமைதியாகப் பெருமூச்சைப் பிரித்தான் ; காரணம், எதிர் முகாம்’ ஓரள்வு அமைதி பெறப் பழகிக் கொண்டிருந்தது : - 'அம்மா !” என்ன, தம்பி ?” r "ஒரு மாதிரி யிருக்கீங்களே, ஏனம்மா ?” "ஒண்ணுமில்லை : "நல்லவேளை...! அமாம், சிந்தாமணியை நினைக்கிற போது, மனசுக்கு ரொம்ப வேதனையாக யிருக்குது, அம்மா !so . - 'வாஸ்தவம் தான் ; ஆண்டவன் சோதனைக்கு நம்மாலே என்ன தேறுதல் சொல்ல முடியுது!...பாவம் 'நீங்க சொல்றதுதான் சரி..ஆனலும், சிந்தா மணியின் எதிர்கால வாழ்க்கைக்கு ஏதாவது ஒரு வழி செய்ய வேண்டாமா ?” - . . .