பக்கம்:வெண்ணிலவு நீ எனக்கு.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21 "கட்டாயம் செய்யத்தான் வேணும் ; நானும் அதைப் பத்தித்தான் யோசிச்சிக்கிட்டு இருக்கேன் மாமல்லா !” பயணத்தின் அலுப்பைத் தண்ணிரில் கரைத்து, பயணத்தின் அயர்வுக்குப் பதில் கூற காலை உணவு அருந்தினுன் மாமல்லன். ஊதைக் காற்று சிலிர்ப்பை அள்ளி வீசியது. அதன் வல்லமை இளம்பரிதியிடம் அஞ்சியது. பிறர் அமைதிக்கு வழி வகுக்கப் பிரயத்தனம் செய்த அவனுடைய நிம்மதியைப் பறித்துக்கொள்ள வீட்டிலே ஒரு கடிதம் காத்துக்கொண்டிருந்த உண்மை ரகசியத்தை அவன் அப்போது அறியமாட்டான் ! அந்தத் துயரச் செய்தி, அந்த எள்ளத்தனைப் பொழுதில், அவன் காதுகளில் ஒலித்தபோது, மண்டை வெடித்துச் சிதறியது. நெரித்த் திரைகடலில் என்ன கண்டானுே ? இல்லை, நீலவிசும்பினிடை என்ன கற்பனை தோன்றியதோ ? . 'மேகலை ! அப்படியென்ருல் நம் பால்யக் கனவு பாழாகி விட வேண்டியது தாஞ...?’ என்று தன்னை மறந்து ஓலமிட்டுக் கொண்டிருந்தான் மாமல்லன். 3. { } பாட்டைத் திறப்பது பண்ணுலே இன்ப | வீட்டைத் திறப்பது பெண்ணுலே!’ | ஆண்டவனுக்குக் கண்ணும்பூச்சி ஆட்டம் என்ருல், ஒரே பித்தம். அவன் படைத்த பகுத்த்றிவு உயிர்களே அவனுக்கு விளையாட்டுத் தோழர்கள்-தோழிகள். இந்த உயிர்ப் பிண்டங்களின் கண்கள் திறந்திருக்கும் நேரத் 2