பக்கம்:வெண்ணிலவு நீ எனக்கு.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 தில், கனவுகள் விழி வழி புகுந்து, அவரவர்களுடைய இதயங்களிலே இடம் சேகரித்துக்கொள்கின்றன. மேற் சொன்ன ஆணுே, அல்லது பெண்ணுே கனவுகளில் வாழ்ந்து, புவியை மறக்கும் பொழுதிலே, படைத்தவன் இந்தப் படைப்புப் பொருள்களைப் பெயரிட்டுஅழைத்துத் தின்னுடைய இந்தக் கண்பொத்தி விளையாட்டிற்குச் சேர்த்துக் கொள்கிருன். தெய்வத்தின் புதிர்ச்சிரிப்பு அக் கணத்தில்தான் தொடங்குகிறது ; அதே தருணத்தில்தான், மனிதர் களுடைய தேம்பலும் ஆரம்பமாகிறது. இவர்களது கண்களை மூடி விளையாடும் பரம்பொருளின் கைகளே எழுதி எழுதி மேற் செல்லும் விதியின் எழுத்தாகவும் அமைகின்றது. ஈசனின் வேடிக்கைப் புன்னகை உலகில் படர்ந்து அதன் அலைகள் எங்கும் எதிரொலி செய் கின்றன. மனிதர்கள் அந்தக் குரலைக் காது கொடுத்துக் கேட்க முனைகிருர்கள் ; முடிவு, தோல்வி. அப்பாவி மனிதர்களின் கண்ணிர்த் துளிகள் ஒவ்வொன்றும் எழுப் பும் அழுகையை அவன் பார்க்கிருன் ; விளைவு, வெற்றி. ஆகவே, மனிதனின்_தெய்வம் சிரிப்பை நிறுத்தாமல் தெய்வத் திருப்பணியினைத் தொடர்கின்றது; தொடர்ந்து கொண்டே யிருக்கின்றது ! இது வாழ்க்கை ! மாமல்லன் விம்மினுன் : பொருமினுன் , அழுதான் ; அலறிஞன் துடித்தான். 'தம்பி, அழாதேப்பா !” அழவேண்டாமென்று வேண்டியவள் அழுதாள் ; பெற்ற மகன் சிரிப்பதைக் கண்பூத்துப் போகுமட்டும் பார்க்கவேண்டுமென்று காத்திருந்தவள் அழுதாள் ; பெயர் சொல்லப் பிறந்தவனே ஒரு வினுடிகூட கண் கலங்க வைக்கக் கூடாதென்று எண்ணமிட்டு, தன் கண்ணிரைக் காணிக்கை வைத்து ஈசனிடம் பிரார்த் தித்துக் கொண்டவள் அழுதாள் ; அழுதாள். - கோசலை அம்மாள் கண்களைத் துடைத்தவாறு