பக்கம்:வெண்ணிலவு நீ எனக்கு.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23 மாமல்லனை நெருங்கி, 'தம்பி, நடந்ததை மறந்திடு, மாமல்லா !” என்று கெஞ்சினுள். 'அம்மா ... அம்மா ...எதை அம்மா மறந்துவிடச் சொல்றிங்க ? மாமன் மகள் மேகலையையா ? அல்லது, மாமன் மகளோடு பாசமும் நேசமுமாகப் பழகினதையா? எதை அம்மா மறந்திடச் சொல்றீங்க ?...சொல்லுங் கம்மா, மறந்திடுறேன் !’ 'மாமல்லா, என்னென்னமோ பேசிறியே ? என்ன பதில் சொல்றதின்னே ஒண்னும் மட்டுப் படலேயே, தம்பி !” மாமல்லனும் கோசலையும் விம்மலை நிறுத்தவில்லை. மேகத் துண்டங்கள் நெட்டித் தள்ளிய நிலாக்கீற்று அள்ளிச் சொரிந்த வண்ணப் பொடியைக் காலால் எட்டி மிதித்துக் கொண்டிருந்தார்கள் அவர்கள். முல்லை நகை புரியும் நிலவுக் கன்னிகையைப் பற்றற்ற இதயத்துடன் அனுபவிக்கும் தவமுனியின் நிலையில் இருந்தான் மாமல்லன். இதே நிலா மாளிகை யில் மேகலையை அழைத்து. அமர்த்தி, எத்தனையோ தடவை அழகு பார்த்திருக்கிருன் இதே மாமல்லன். ஆணுல், இன்ருே அந்த மேகலை எட்டாத தூரத்திற்குப் பிரிக்கப்பட்டுவிட்டாள் ; ஒட்டாத உறவுக்கு ஒதுங்கிச் சென்றுவிட்டாள் ; உரிமையையும் உறவையும் துண் டித்து விட்டது. எது? அவனுடைய ஊழ்வினையா ? விதியா ? இல்லை...! 'அம்மா, நம்ப மேகலையை...உங்க மேகலையை நான் ஒருதரம்-ஒரே ஒரு தரம் மாத்திரம் பார்த்திட்டு திரும்பிடறேன்...இன்னிக்கு ராத்திரிக்கே அரியலூருக் குப் போய் வரட்டுமா, அம்மா ?” "உங்க இரண்டு பேர் ஜாதகமும் எப்போ பொருந் தலையோ, அப்பவே நீ மேகலையை மறந்திடத்தான் பிரயத்தனப் படணும். இனிமேல் மேகலை யாரோ, நாம யாரோ ...என்ன செய்யறது ?...கோட்டையிலே பிறந் தாலும் போட்ட புள்ளி தப்பியா போயிடும் ... எங்க அண்ணு எழுதியிருந்த கடுதாசியை நீதான் படிச்சுப்