பக்கம்:வெண்ணிலவு நீ எனக்கு.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 பார்த்தியே ?...அவங்களும் நம்பளைப்போல வருத்தப் படத்தான் செய்வாங்க...பாவம், அந்தப் பொண்ணுந்: தான் புழுவாத் துடிச்சுக்கிட்டிருக்கும். எப்பவோ ஆண் டவன் எழுதின தலை எழுத்து இது. இப்பத்தான் நம்பளுக்குத் தெரியுது, தம்பி, வா...ஒரு வாய் சாப்பிட் டிட்டுப் படுத்துத் துங்கு...ராச் சாப்பாட்டை ஒதுக்கப் படாது வா. தம்பி !” - 'எனக்குப் பசியே இல்லே, அம்மா. நீங்க போய்ச் சாப்பிடுங்க !” வேடிக்கையான பிள்ளை நீ! ’ வாஸ்தவந்தான், அம்மா. நான் வேடிக்கையான பிள்ளைதான். இல்லையானுல், என் மேகலை என்னை விட்டுப் பிரிக்கப்பட்டிருக்க முடியுமா ?” 'தம்பி மாமல்லா, இனி நீ மேகலையைப் பத்தி மனசிலே நினைக்கிறது.கூட தப்பு...!" "அம்மா !” "ஆமாப்பா !” “என்னம்மா, இப்படிப்பட்ட குண்டைத் துரக்கிப் போடுறீங்களே ?...மேகலை என் உயிர், உடல், உள்ளம் மூன்றிலேயும் நிரந்தரமாக குடியிருக்கிறபோது, எப்படி ய்ம்மா அவளை என்னுலே மறக்க முடியும் ?. அதை மட்டும் மறுபடியும் நினைப்பூட்டாதீங்க. என்னை மறந்து ஒரு நாள் இல்லே, ஒரு வருஷம் வேணுமானலும் உயிர் தரிச்சிருப்பேன். ஆணு, என் மேகலையை மறந்து அரைக் கணங்கூட நான் உயிருடன் இருக்கமாட்டேன்; இருக்க முடியாது, அம்மா !” - மெல்லிய இருமல் சத்தம் கீழிருந்து புறப்பட்டுப் படிதானடி மாடிககு வநதது. - - மாமல்லன் கண்களைத் துடைத்தான், மாடி வழியில் அவன் பார்வை போய் நின்றது. யாரும் வரக்காளுேம். மீண்டும் இருமல் ஒலிதான் வந்தது.