பக்கம்:வெண்ணிலவு நீ எனக்கு.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25 _சிந்தாமணி அது ' என்று குறிப்புத் தந்தாள் கோசலை. தொடர்பிழந்த பேச்சுக்குத் தொடர்பு தேடினுன் அவன். பிறகு அவனையும் உணராமல் பெருமூச்சு வெளிக்கிளம்பியது. சுங்கவரி இலாகாவிலிருந்து ஊளையிட்டது சங்கு. மாமல்லன் சாப்பிட்டுத்தான் ஆகவேண்டுமென்று கோசலை அம்மாள் அடம் பிடித்தாள் அவன் உணவு கொள்ள முடியாதென அழும்பு செய்தான். கடைசியில் வெற்றியை அடைந்தவள் தாய். "ஒருநாள் உணவை ஒழியென்ருல் ஒழியாய்” என்று 'இடும்பை கூர் வயிற்ற்ை முன் வைத்துப் பா. புனேந் தார் கவிஞர். ஆல்ை, அன்றைய அவனுடைய நிலையை உத்தேசித்து அவன் வயிறு அவனைத் தொந்தரவு ஏதும் செய்யவில்லை. அவனைப் பெற்ற புண்ணியவதிதான் அவனுக்கு அல்லல் தந்தாள். பெற்ற வயிற்றுக்கல்லவா அவள் அனுபவித்த அல்லலின் தன்மை புரியும் ! பெற்ற மனம் மாத்திரம் பித்து அல்ல ; பிள்ளை மனமும்தான் பித்து ! நேரம் கெட்ட நேரம் ; வேளை தவறிய வேளை. கீழே கூடத்துக்கு வந்தான் சாப்பிட உட்கார்ந் தான் மாமல்லன். கோசலை அம்மாள் காய்கறி, குழம்புப் பாத்திரங்களை எடுத்து வைத்துக் கொண்டாள் ; சோறு படைத்தாள். - - நெற் கதிர்களைக் கைகளால் அளைந்து விடும்போது ஒரு வகையான சலசலப்புச் சத்தம் உண்டாகும் பாருங் கள், அந்த ஒலி வடிவத்தில் அங்கு சலனம் பிறந்தது. மாமல்லன் ஏறெடுத்துப் பார்த்தான். வத்தல் குழம் பைப் பிசைந்தெடுத்து கவளமாக்கி வாயருகில் கொண்டு போன வலது கை ம்ந்திரத்தால் கட்டப் பட்டாற்போல அப்படியே நின்றது. ச்ோற்றுப் பருக்கைகள் உதிரிப் பூக்கள் ஆயின. எண்ணப் பூக்களும் பறந்து விரிந்தன. என்னவோ, நினைவுப் பூக்களின் சுகந்தம் அலாதி.