பக்கம்:வெண்ணிலவு நீ எனக்கு.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27 நெய்க் கிண்ணத்தை நீட்டியபோதும், அவள் மேகலை யைத் தான் எண்ணிக் கொண்டாள். வழவழப்பு மிகுந்திருந்த தரைக்கு அங்கங்கே பொட் டிட்ே !" துளிகள் சிந்தியிருந்தன. ம்ாமல்லன் அவற்றையே பார்த்துக்கொண்டான். தன் னுணர்வு வந்த தாய், தன் நினைவைப் பறிகொடுத் திருந்த தனயனைத் தட்டி, உணவு உட்கொள்ளுமாறு பணித்தாள். காலச் சிமிழிலிருந்து வினுடிகள் சிலவற்றை எடுத் துத் தெருவில் வீசினுள் கோசலை அம்மாள். மாமல்லன் கூடம் நீங்கி மாடிக்குச் சென்ருன். தலைக்கு மேலே சிவப்புப் புள்ளி தெரிந்தது. தபால் வினியோகப் பிரிவு விமானம் அது. மணி பதினென்று; நிமிஷம், பதினைந்து. மேகலை மேகலை !' என்ற பெயரை விடிந்த பிறகும் அவன் உதடுகள் உச்சரித்துக் கொண்டேயிருந்தன. எழு பொழுது : காலே இளம் பரிதிச் செல்வன் புவிச் செல்வியுடன் மணல் வீடு கட்டி விளையாடத் தொடங்கி விட்டான். மாமல்லன் துயில் நீங்கிக் கண்களைத் திறந்தான். அவனது முதற் பார்வையில் சிந்தாமணிதான் விழுந் தாள். மாடியில் அப்பியிருந்த பனி மூட்டம் மெள்ள மெள்ள விடை பெற்றுக் கொண்டிருந்தது. . மாமல்லன் துண்டை எடுத்துக் கண்களைத் துடைத் தான். விழிகளை மூடி மூடித் திறந்தான். சிந்தாமணியின் உருவம் மாறி மாறித் தோன்றியது, ராத்திரி முச்சூடும் நீங்க துரங்கலையா ? கண்ணெல் லாம் ஒரே சிவப்பாயிருக்கே ?? கட்டிலே விட்டு இறங்கிய அவன், அருகிருந்த மேஜைமீது காணப்பட்ட அந்தப் புகைப் படத்தை எடுத்து வேருெரு பத்திரிகையில் மறைத்துவிட்டு, மாடிக் கைப்பிடிச் சுவர் ஓரத்தில் நின்ருன், : . . சிந்தாமணி அனுப்பிய கேள்வியை அவன் மறந்து