பக்கம்:வெண்ணிலவு நீ எனக்கு.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 விடவில்லை. ஆல்ை, என்ன பதில் சொல்லுவதென்ற சிந்தனையைத்தான் அவன் மறந்து போனன். அவ்வாறு மறந்தது அவன் குற்றமா ?

  • வெந்நீர் போட்டிருக்கேன் ; போய்க் குளிச்சிட்டு வாங்க முகம் தெளிவா யிருக்கும்.’’ என்ருள் அவள்.

அன்றைக்கு வெள்ளிக்கிழமை, குளித்து முழுகி மஞ்சள் பூசி திலகம் இட்டிருந்தாள் சிந்தாமணி. நெளி நெளியாகப் படிந்திருந்த கேசத்தில் இரண்டொரு மயி ரிழைகள் நெற்றி மேட்டில் ஒதுங்கின ; வேறு சில இழைகள் கன்னங்களிலும் காதோரங்களிலும் படர்ந் திருந்தன. அவள் அவனேயே பார்த்தாள். " ஆகட்டும், சிந்தாமணி, நீ.நீங்க போங்க...... போய்க் காலாகாலத்திலே சாப்பிடுங்க ! நேற்று இரவு தானும் தன் அம்மாவும் சஞ்சலத்தில் பங்கு பிரித்துக் கொண்டிருக்கையில், மெல்லிய இருமல் சத்தம் சிந்தாமணியின் அடித் தொண்டையிலிருந்து புறப்பட்டதையும், அவள் நெய்க் கிண்ணத்துடன் கூடத் துக்கு வந்ததையும், இப்பொழுது காலைப் பணிவிடைக் குத் தயாராக யிருப்பதையும் எண்ணிப் பார்த்தான் மாமல் லன், பனிப் படலத்தில் முகங்காட்டும் புகைப்படம்போல அன்று ஒருநாள் புத்தகத்தில் சந்தித்த சிந்தாமணியின் உருவப் படத்தையும் நினேவுக்குக் கொண்டு வந்தான் அவன். அவனுக்குத் தலைவலி மிஞ்சியதுதான் மிச்சம் ; அவள் தலைமறைவாகச் சென்றதுதான் பலன். காலப் பலகாரம் முடிந்தது. வீட்டில் இருந்தால் பைத்தியம் பிடித்துவிடும் போலிருந்தது ; ஆகவே, அலுவலகத்தில் இயந்திரங்களுக்கு மத்தியில் தன்னை அமைத்துக் கொண்டு, பொழுதை நெட்டிப் பிடித்துத் தள்ள வேண்டுமென்று முடிவு கட்டினுன் மாமல்லன். உடனேயே அம்முடிவை மாற்றினன். இங்கேயே இருந்து என் மேகலையைப் பற்றி நினைத்துக் கொண்டே இருந்தால் என்ன? ஆமாம், அதுவே சரி' என்ற ஒரு திருப்பமும் ஏற்பட்டது. என் மேகலை என்ற உரிமை பிறந்தபோது, அவன் உள்ளத்தே உண்டான இன்ப