பக்கம்:வெண்ணிலவு நீ எனக்கு.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 மூன்று வருஷம் நான் பர்மாவுக்குப் போயிருந்தேன். சென்ற மாசம்தான் திரும்பினேன்,' என்று விளக்கம் கொடுத்தான் திருமாறன். " ஓ..நினைவு வந்து விட்டது!” அசட்டுச் சிரிப்புச் சிரிக்க முயன்ருன், பெரிய இடத்துப் பிள்ளை ஒடிகொலான் வாசனை கம்’ மென்று வந்தது. வாசனைக்கும் இதைப் பயன்படுத்து கிருர்கள்; உடல் நலக் குறைவின் போதும் இது உப யோகப்படுகின்றதே ! அதே போல...இந்தப் பணக்கா ரப் பிள்ளையின் சிநேகமும் எனக்கு ஆபத்துக்கு உத. வுமோ? இல்லை, தன்வரை மணம் பரப்பும் விளம்பரமாக இருந்து விட்டுத்தான் போய்விடுவானே இவன்...? என்று சிதறிய சந்தேகம் ஒன்று தலையை நீட்டியது. கையிலிருந்த கடிதம் அவன் நெஞ்சத்தில் ஆர்வத். தைப் பாய்ச்சியது. பைக்குள் இருந்த லீவுக் கடிதம் அவனுடைய கடமை உணர்ச்சிக்குத் தூபமிட்டது. இப்படிப்பட்ட இரண்டுங் கெட்ட நிலையில் அவன் முன் அவனது நண்பன் நின்ருன். திருமாறனின் பட்டுச் சட்டையில் வேர்வைத் துளிகள் சில வழிந்து காய்ந்து கொண்டிருந்தன. "திருமாறன், வாருங்கள்...உள்ளே போகலாமே.' " ரொம்பவும் நன்றி, மாமல்லா நான் இன்று இரவு அரியலூருக்குப் புறப்படுகிறேன். அடுத்த வாரம் உங்களைச் சந்திக்கும்போது, நீண்ட நேரம் நிம்மதியாகப் பேசலாம் , வரட்டுமா?’ என்று சொல்லி விடைபெற். ருன் திருமாறன். o - மாமல்லன் தெருவில் கவனம் பதித்தபோது, திரு. மாறன் பிளிமத் காரை ஒட்டிச் செல்வதைக் கண்டான். நல்ல பிள்ளை; காலேஜில் பார்த்த திருமாறனிடம் என் னென்ன புதுப்புது மாறுதல்களெல்லாம் ஏற்பட்டிருக். கின்றன! அவன் அதிருஷ்டக்காரன்தான்!...காரை நிழலில் பத்திரமாக நிறுத்திவிட்டு வந்தவனை உள்ளே கூட்டிப் போய் உட்காரவைத்துப் பேசியிருக்க வேண்