பக்கம்:வெண்ணிலவு நீ எனக்கு.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31 டும்.” என்று நினைத்து, தான் இழைத்த தவறுதலுக்கா கக் குறைப்பட்டான். பாரதியாரின் பாடல் ஒன்றைக் காட்டியது இலக்கிய மனம், பாட்டைத் திறப்பதற்குப் பண் ஒன்று இருக் கிறது ; அதேபோல இன்ப வீட்டைத் திறப்பதற்குப் பெண் ஒருத்தி வேண்டும் ! என்ற சிந்தனை வழி கோலியது. மேகலையின் முதற் கடிதத்தை மாமல்லன் படித்து முடித்தான் அதே வினுடி, தன்னை விட்டு மேகலை வில கிச் சென்றுவிட்ட்தாக மாத்திரம் அவளுல் எண்ணி முடிவுகட்ட இயலவில்லை. மேகலை தன்னைச் சுற்றி மட்டு மல்லாமல், தன் இதயத்துள்ளேயும் வட்டமிட்டுக் கொண்டிருப்பதாகவ்ே அவனுடைய உள்ளத்தின் உண்மை இயம்பியது; அவன் நம்பிக்கையில், கனவில், நினைவில் வாழ்பவன். அதுவே அவனுக்குச் சஞ்சீவி மருந்து. ஆமாம், அப்படித்தான் செய்யப்போகிறேன் : அவள் என் மேகலை !’ என்ற வார்த்தைகள் அவனு: டைய மனத்தாளில் எழுதப்பட்டன. . 4 . " திக்குத் தெரியாத காட்டில்-உனத் தேடித் தேடி இனத்தேனே." | தாய்க்குத் தான் பெற்ற குழந்தையைக் காணும்போது மார்பகத்தில் பால் சுரக்கின்றது; உடன் பிறந்தவர்கள் ஒருவரை மற்ருெருவர் சந்திக்கையில், நெஞ்சத்தில் ப்ாசம் கொப்புளிக்கிறது ; வேண்டியவர்களிடம் மனம் விட்டுப் பேச வாய்ப்பு உண்டானுல், மனத்தில் அன்பு வெள்ளம் பெருக்கெடுக்கிறது ; அம்மையப்பனை - அகி.