பக்கம்:வெண்ணிலவு நீ எனக்கு.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 to லாண்டேஸ்வரியை வணங்கும் சமயத்தில், அருள் பொங்குகின்றது ; பக்தி பண்படுகின்றது. மனித மனங்களின் அடியில் உறங்கும் தெய்வ உணர்ச்சிகள் இவை. மனிதர்கள் இவற்றை வாழவைக் கிருர்கள் : இப்படிப்பட்ட தெய்வ உணர்ச்சிகள் மனிதர் களை வாழவைக்கின்றன. வாழ்க்கையின் பொது விதி இது. கோசலை அம்மாள் சிந்தாமணியிடம் அன்பு காட்டி ஞள். அன்பின் சுமை தாளாமல், அந்தப் பெண் திக்கு முக்காடினுள். கோசலை அம்மாளிடம் சிந்தாமணிக்குப் பக்தி சுரந்தது. ஆதரவு இழந்த அளுதைப் பெண்ணுக் குத் தெய்வம்போல்ப் புகல் அளித்து வருபவள் அல் லவா அவள் ? என்னமோ இந்த மட்டுக்குமாவது எனக்குத் தங்குகிறதுக்கு ஒரு நிழலைக் காட்டியதே தெய்வம், அதுவே என் பூஜாப்லன்தான் ! என்ற நன்றி உணர்ச்சி அடிக்கடி சிந்தாமணியின் இதயத்தில் தோன்றிக் கொண்டிருந்தது. சிந்தாமணி கூடந்திலிருந்தவாறு வாசற்புறம் கண் பார்வையைத் திருப்பிவிட்டாள். மாமல்லன் அலுவல கத்துக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தான். கையில் புது பைல் ஒன்று இருந்தது. அவசரம் என்று சிவப்பு மையில் ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டிருந்தது. அவனும் அவசர அவசரமாகத்தான் புறப்பட்டுச் சென்ருன். மாமல்லன் பலகாரம் சாப்பிட்ட வெள்ளித் தட்டைக் கழுவ முற்றத்துக் குழாயடிக்கு வந்தாள் சிந்தாமணி. எச்சில் தட்டையெல்லாம் நீ கையாலேகூடத் தொடக் கூடாது; சிந்தாமணி,' என்று எச்சரித்தாள்; எச்சில் தட்டை அவளே வாங்கிக்கொண்டாள்; கழுவிச் சுத்தம் செய்தாள். எச்சிலின் வாத்ஸல்யத்தைத் திாய்தான் பரி பூரணமாக உணர முடியும். சிந்தாமணி ஆடாமல் அசையாமல் நின்ருள்.

  • நீ போய்ச் சாப்பிடம்மா...!"

-