பக்கம்:வெண்ணிலவு நீ எனக்கு.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* நீங்க...” " நான் அப்புறம் சாப்பிடறேன். முதலிலே நான் மல்லிகேஸ்வரர் கோயில் வரைக்கும் போயிட்டு வர னும்...நீ சாப்பிடு, சிந்தாமணி. சாப்பிட்டானதும், பருப்பை அவியவை ; உலை வைக்கறத்துக்கு ஏற்பாடு செய்...” என்று சொன்னுள் : பூஜைக் கூடையை எடுத் துக் கொண்டு கிளம்பிளுள் கோசலை. அப்பொழுது சிந்தாமணி நிம்மதியடைந்தாள். அங்கு வந்த இத்தனை நாட்களாகக் கிடைக்காத தனிமை இப்போது அவளுக்குக் கிடைத்தது. வெளித் தாழ்வா ரக் கதவை உட்பக்கமாகத் தாளிட்டாள் ; இரண்டாங் கட்டை அடுத்திருந்த சிறிய அறையில் காணப்பட்ட கள்ளிப் பெட்டி ஒன்றைக் கூடத்துக்கு எடுத்து வந்தாள். துணிமணிகள் சில கசங்கிக் கிடந்தன. பழைய வில்லை ஒன்றும் கண்ணில் பட்டது. "அப்பா !” என்று விம்மி ளுள். உடல் பூராவும் நடுங்கியது. அவளது கைகள் பெட்டியைத் துழாவின. ஒரு கடிதக் கட்டு கைக்கு வந் தது. பினைத்திருந்த வாழை நாரை அறுத்தாள். காலத் தின் கறை படிந்த உதிரிக் கடிதங்கள் உதிர்ந்தன. கண் கள் சேகரித்து வைத்திருந்த தாபத்திற்குச் சாட்சி கூற கண்ணிர் முத்துக்கள் ஒவ்வொன்ருக அணி வகுத்துப் புறப்படலாயின. அத்தான்...அத்தான் ' என்ற உற. வுச் சொல் ஒலிக்கத் தொடங்கியது. ஒன்றிரண்டு தபால் களைப் புரட்டினுள் சிந்தாமணி.

  • சிந்தாமணி !

அத்தான் நான் அழைக்கிறேன். அத்தை மகள் நீ பதில் சொல்லமாட்டாயா ? - நீ எங்கோ இருக்கிருய்; நான் எங்கோ இருக்கி றேன். ஆகுலும் நம் ஆசை முகங்கள் இரண்டும் அரு. கிருந்து, அன்பு சேர்த்து, ஆறுதல் மொழி சொல்லிக் கொள்கின்றனவே...! இந்தக் காட்சியை நான் உணர் கிறேன். உனக்கும்_தெரிந்திருக்க வேண்டுமே! இந்த இன்ப நிலை ஒன்று போதுமே, ஏழேழு பிறப்புக்கும் நம் பிணைப்புக் கயிறு அறுபடாமல் இருக்க...!