பக்கம்:வெண்ணிலவு நீ எனக்கு.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 சின்னக் கரித்துண்டு என் விரலிடுக்கில் அகப்பட் டுக் கொள்ளும்போது, உன்னை நான் படைக்கிறேன் ; பார்க்கிறேன் ; பரவசமடைகிறேன். விளங்குகின்ற உறவு முறையும், விளங்காத பாசபந்தமும் என்னை உன் பால் பைத்தியமாக்குகின்றன. பார்க்கும் இடமெங்கும் நீக்கமற நிறைந்திருக்கிருளும் அய்யன். நான் கண்டது கிடையாது ; காண வேண்டுமென்று எண்ணியதும் கிடையாது. ஆணுல், நான் காணும் திசையிலெல்லாம் கடவுளைக் காஞ்விட்டாலும்-அல்லது, காண முடியா விட்டாலும், அரம்பையரை மிஞ்சும் பூவையரைக் காணத் தவறுவது இல்லை : ஒர் அதிசயம் என்ன தெரியுமா?... ம், சொல் சிந்தாமணி, சொல் சரி, நானேதான் சொல்லி விடுகிறேனே தோன்றும் பெண்களிலேதோற்றம் தரும் விழிக் கணைகளிலே உன்னையே காணு கிறேன்; காந்தம் மிகுந்து பேசும் உன் கயல் விழிகளையே தான் தரிசிக்கிறேன். இந்த ஒரு பாக்கியம் என்னுள் வரப்பிரசாதமாக அமைந்திருக்கையில் எனக்குப் புதிய கனவு எதற்கு ? புதிய உலகம் ஏன் ? புதுத் திருப்பத் தான் எதற்கு ?

  1. 3 * * * * * * g o q + 4 g.

கையெழுத்து இல்லை. பேணுவை எடுத்து அந்த இடத்தில் ஏதோ எழுதினுள் அவள். குலோத்துங்கன் : என்ற பெயர் உருவானது. - விழிக் கதவுகள் அடைபட்ட தருணத்தில், வாசற் கதவுகள் தட்டப்பட்ட சத்தம் கேட்டது. எல்லாவற்றையும் அப்படியே திணித்து, கள்ளிப் இபட்டியை இருந்த இடத்தில் வைத்துத் திரும்பினுள் சிந்தாமணி. வழிந்த நீரை வழிவிலக்கிவிட வேண்டு மென்று சித்தம் ஞாபகப்படுத்தவில்லை. அவள் வாசற் கதவுகளை நெருங்கித் திறந்தாள். கோசலை அம்மாள் திருநீறு விளங்கிய நெற்றியோடு காட்சியளித்தாள். அழுதியாம்மா, சிந்தாமணி' என்று கேட்டதற்குப் பிற்பாடுதான் சிந்தாமணிக்கு உணர்வு வந்தது. கண்ணி