பக்கம்:வெண்ணிலவு நீ எனக்கு.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 அதாழி மாதவிக்கு தியாகராய நகருக்கு எழுதிய கடிதத் தைத் தபாலில் சேர்க்க எண்ணி வழி நடத்தாள். * மாதவியின் பதில் நல்லவிதமாக அமைந்தால் நல்லது , அவள் மாதிரி எனக்கும் அன்னே கஸ்தூரி பாய் அளுதை இல்லத்தில் இடம் கிடைத்து விட்டால்தான் எனக்கு நிம்மதியாகயிருக்கும்...கொஞ்ச காலம் பயிற்சி முடிந்தால், எப்படியும் ஆசிரியை வேலே கட்டாயம் கிடைக்கத்தான் கிடைக்கும் !... ஆமாம் எவ்வளவு நாளைக்குத்தான் கோசலை அம்மாளுடைய சோற்றுக்குக் கேடாக நான் இருக்கமுடியும்?. இடம் பொருள் ஏவல் தப்பிப்போளுல் எந்த அன்புக்கும் அடைக்கும் தாழ் தன்னுலே உண்டாகிவிடு மென அப்பா சொல்வார் களே ... பாசம் நிறைந்த அன்பைச் சொரிய ஒரு கோசலை அம்மாளும், பண்பு நிரம்பின அன்டைக்காட்ட ஒரு மாமல்லனும் எனக்குக் கிடைத்திருக்கிருர்களே. :இந்த ஒரு பாக்கியம் என்றென்றும் நீடித்து நிற்கு மென்று என்ன நிச்சயம் ? இந்தப் பாக்கியத்தை நீடிக்க விட இந்தப் பழிகார உலகந்தான் ஒப்புமா ?...' தபால் பெட்டியைக் கூப்பிட்டாள் ; அது வந்தது ; என்ன சேதி' என்று கேட்டது. அவள் செய்தியைச் சொன்னுள். ஒ என்று இன் முகங்காட்டி, ஏந்திழை, நீட்டிய கடிதத்தை ஏந்தியவாறு பறந்தது பெட்டி. சிந்தாமணி திரும்பினுள். சந்துத் திருப்பத்தில் இருந்த சாயாக் கடையிலிருந்து கிராமபோன் பெட்டி பாடிக்கொண்டிருந்தது. திக்குத்தெரியாத காடாம், பாவம் ; தேடித்தேடி இளைத்தாளாம்! யார், ராதையா ? யாரைத் தேடி இளைத்தாளாம் ?... கண்ணனைத்தானே ! . அவள் கவனம் எங்கோ சென்றது; ஆளுல் அவள் கவலை அங்கேயே தங்கியது. உடல் உள்ளவரையில் கடல் கொள்ளாக் கவலை என்பார்கள். அந்தி சந்திப்பொழுது. மாமல்லன் அலுவலகத்தி லிருந்து திரும்பியபோது, சிந்தாமணி மாத்திரமே இருக்கக் கண்டான். அம்மா தெரிந்தவர்கள் வீட்டுக்குப் போயிருப்பதாகவும் அறிந்தான். உடம்பில் ஒட்டியிருந்த அலுவலகத் தூசியைக் கழுவிச் சுத்தம் செய்தான்.