பக்கம்:வெண்ணிலவு நீ எனக்கு.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39 ஆயத்தமாகி நின்றது ரெயில் திருச்சிப் பெட்டியில் ஏறினுன் ; தோல் பையைப் பெஞ்சியில் வைத்தான். மூன்று பேர்களுடன் நான்காவது நபராக அமர்ந்த அவ னுக்கும் இடம் ஒதுக்கித் தரப்பட்டது. ஒடும் ரெயிலில் அறிமுகம்ாகும் நட்பும் அன்பும் ஒடும் ரெயிலுடனேயே ஓடிவிடுவது கிடையாது; ஒட்டி விடுவதுதான் வழக்கம் , அதுவே தமிழ் மரபு. -. . ஏன் ஸார், வண்டி அரியலூருக்கு எத்தனை மணிக் குப் போய்ச் சேரும், தெரியுமா ?” . - ' பலார்னு விடியப் போய்ச் சேர்ந்திடும். தம்பி அரியலூர்தாளு? ' - . " இல்லீங்க; சொந்த ஊர் திருச்சி ; இப்போ சொந்த்க் காரங்க வீட்டுக்குப் போறேன்.” பொடி மூடு தழலின் மீது மூச்சுக் காற்றுப்பட்டாலும் போதும், நீறு பிரிந்து நெருப்பு சிரிக்கத் தொடங்கி விடும். அதே போல, முன்பின் பார்த்திராத மனித உள்ளங்களிடையே அன்பின் பரிவர்த்தனை நிகழ்ந்த வுடன், பாசி மறைந்து பற்றும், பாசமும் சிரிக்கத் தலைப் .பட்டு விடும். - * . . பெரியவரைப் பார்த்தான் மாமல்லன்; அவரையே இன்னும் கொஞ்சப் பொழுதுக்குப் பார்த்துக் கொண்டே யிருக்கவேண்டும் போலிருந்தது. பெரியவரின் பெயர் அறியான் ; ஆனால், முகம் அறிவான் , இதயத்தையும் புரிந்து கொன்டான். நெஞ்சுக்கும் நேத்திரங்களுக்கும் ஊடாக உருத்தெரியாத் தொடர்பு இருக்கவேண்டும் ; உள்ளம் நெகிழ்ந்தால், கண்ணிர் கரைபுரளும். முதிய வரின் உருவில் திருவைக் கண்டான். அந்தத் திரு அவனுடைய தந்தை. பாசம் கண்ணிர் உரு எடுத்தது. தம்பி, உங்க கண்ணு இப்பிடி ஏன் கலங்குது? ஒண்னும் இல்லீங்க, ஐயா. கரித்துள் விழுந் திட்டுது... அவ்வளவுதான் !' கண்ணிரைத் துடைத்த வண்ணம் அன்றைய மாலைப் பதிப்புச் செய்தித் தாளை மாமல்லன்