பக்கம்:வெண்ணிலவு நீ எனக்கு.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 புரட்டிக் கொண்டிருந்தான். ஆவடி காங்கிரஸ் விழாப் படங்கள் அச்சாகி யிருந்தன. சந்திப்பு நிலையத்தில் பிரிய வேண்டிய வண்டிக்குப் பிரியா விடை கொடுத்தது மணியோசை. துரத்துக்குடியைக் குறி வைத்து ஓடியது எக்ஸ்பிரஸ். மாமல்லன் அரியலூரை எல்லை கட்டி அமர்ந்திருந்தான். தொட்டால் ஒட்டிக்கொள்ளும் பசையும் மனமும் ஒன்று. அரியலூர் நினைவு அவனது உள்ளத்தில் ஒட்டியது. பசையின் பணியை ஏற்றது நினைவு ; பின்னர் அது வழி மறைக்கும் நந்தியாக விரும்பவில்லை ; ஒதுங் கியது. ஆனல் எஞ்சி நின்ற சிந்தனைக் கதிர் அரிய லூர்ப் பாவையின் நினைவுக்குச் சிவப்புக் கோடிட்டுக் காட்டியது. அவன் அவளாணுன் ; இதழ்க் கரையில் மேகலை !' என்ற அன்பின் கூப்பாடு கரை சேர்ந்தது. முழு நிலவு பொழிப்புரை கூறும் எழில் நிறைவு அவளது வதனத்தில் குடி புகுந்தது. பிறை நிலவு கதை சொல்லும் புத்தம் புதிய கட்டுக்கோப்பு அவ ளுடைய கண்கள் இரண்டிலும் சரிபாதியாக நிறைந்து காணப்பட்டது. பனி நிலவின் போதையும் போதமும் அவளின் உதடுகளுடன் ஒட்டுறவு கொண்டன. துண்ட மதியின் நுனிபோலமைந்த மூக்கின் இடது பகுதியில் மூன்ரும் பிறை வடிவமைந்த மூக்குத்தி அழகு காட் டியது. நிலவின் உருவமாக-நிலவின் ஒளியாகநிலவின் நிலவாக அவள் ஊர்ந்தாள் ; மிதந்தாள் ; நின்ருள். என்ன தம்பி அழுகிறீங்க?' என்ற குரல் மாமல்லனது நினைவின் பிடரியைப் பிடித்துக் குலுக் கியது. அவன் குலுங்கினன். நுனி போலமைந்த மூக்கின் இடது குனிந்த பார்வை, பிரிந்த பத்திரிகையில் சிதறிக்கிடந்த கண்ணிர் மணிகளைக் காட்டியது; நிமிர்ந்த பார்வை எதிர் வரிசையில் அமர்ந்திருந்த பெரியவரின் அனுதாபம் கனிந்த முகத்தைச் சுட்டியது. . . . . . .

  • அப்பா ஞாபகம் வந்தது !” * அப்பாவைப் பிரிந்த துக்கமா, தம்பி ?”