பக்கம்:வெண்ணிலவு நீ எனக்கு.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 ரங்கரத்தினம் என்பது அப்பெரியவருக்கு இடப் பட்ட பெயர் எனவும், அவருடைய தலைச்சன் பிள்ளை தமிழகத்தின் தலைநகரில் அரசாங்க அலுவலகம் ஒன் றில் ஊதியம் பெறுவதாயும், மகனைப் பார்த்துவிட்டுத் தான் அவர் திரும்புவதாகவும் குறிப்புக்கள் கிடைத்தன. அவருக்கும் சொந்த ஊர் அரியலூராம்...! காத்துத் தவம் கிடந்த சிறிய ரெயில் நிலையங்களை லட்சியம் செய்யாமல், தன் இலட்சியத்தில் கருத்துப் பதித்தது ரெயில். தண்ணிர் பட்டுக் கலைந்த ஒவியம் மாதிரி காட்சி யளித்தது தண்மதி. - விழுப்புரத்தில் வண்டி ஓய்வு கொள்ளப் பதினைந்து நிமிஷங்கள் தேவைதானே ? இருந்த அடைசல் போதாதென்று இன்னும் இரு வர் பெட்டிக்குள் முடங்கிக் கொண்டார்கள். புதுமன்த் தம்பதிகளின் முத்திரை இருந்தது ; புதுமணப் பூரிப்பு இருந்தது. தாழம்பூவின் அழகும் வாசனைத் தைலத்தின் வாடையும் அவர்களுக்குத் துணை நின்றன. புதுக் கணவனும் புது மனைவியும் இடம் தேடிக் கொண்டிருப்பதைக் கூடச் சட்டை செய்யாமல் உருவி ஒடும் சாட்டையைப் போல வண்டித் தொடர் நீண்டு விரைந்தது. வாழ்க்கைப் பங்காளிகளுக்கு உட்கார வழி செய்ய எண்ணிஞன் மரமல்லன்; ஆகவே, உட் கார்ந்தவன் எழுந்தான். பெரியவர் ரங்கரத்தினமும் உடன் எழுந்தார். அவரை புது இணை நிற்கவிடவில்லை; அவர்கள் இருவரும் ஒட்டி உட்காரலாஞர்கள். ஒட்டும் இரண்டு உள்ளங்கள் அல்லவா?... . . . . . . . ; - மேகலையின் நினைவும் நிழலும் அவனுக்குக் குழப்ப நிலையைப் பரிசளித்தன. க்ண்ணில் தெரிந்த புதுச் செவ்வந்திப்பூவின் அழகு கண்ணில் தெரிய மறுத்த கை படாத ரோஜாவின் எழிலை எண்ணத் தூண்டியது; எண்ணினன்; சிந்தை பறிபோனது. இதய்த்தில் சூன் யம் ஆடரங்கு அமைத்தது. மேகலையின் பொற்பாதங் கள் கலீர், கலீர் என்று நாதம் சேர்த்தன. சிலப்பதி