பக்கம்:வெண்ணிலவு நீ எனக்கு.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43 காரத் தம்பதிகள் போன்று அதிசயத் தம்பதியாக வாழ வேண்டுமென்று கனவு கண்ட நெடுங்கதை சிதைந்த சிற்பம் போல, சீரிழந்த குடும்பத்தை ஒப்ப, புகழ் மறைந்த நட்சத்திரம் மாதிரி தெரிந்தது. கண்ணுடிக் கதவைக் கீழே தள்ளிவிட்டு, ஜன்னலின் மடியில் உட்கார்ந்தான் மாமல்லன். ஒடிந்த உள்ளம் உடலைத் தளர்த்திவிட்டது. ரத்த இழப்புக்கு உள்ளான நோயாளி போன்ற ஓர் உணர்வு அவனையும் மீறி எழத் தொடங் கிற்று. வெளியுலகை நோக்கித் தலையை நீட்டின்ை. விண்ணில் அங்கங்கே ஒன்றிரண்டு உடுக்கள் சிதறிக் கிடந்தன. பல்லாங்குழிப் பலகையில் வீசியெறியப்பட்ட சோழிகள் போலே. எட்டிப் பிடிக்கத் துடித்தான். மனிதத் தன்மையின் பல ஹீனம் அடைந்த தோல் வியைக் கண்டு கை கொட்டிச் சிரித்தது விண்மீன் ஒன்று. ' அத்தான் ! என்ற பெண் குரல் கணிரென்று கேட்டது. விண்ணே நோக்கினுன் , யாரையும் காண, வில்லை , மண் தன்னை யாரென்று சொன்னது. குனிந் தான் ; வெள்ளக்காடாகத் தோன்றியது ; மேகலை என்று கூப்பிட்டவன் பயந்து நடுங்கிக் கொண்டு அங்கிருந்து இறங்கி நின்ருன் துளிர்த்திருந்த வேர் வைக்கு வாழ்த்துக் கூறிவிட்டு, நிமிர்ந்த சடுதியில், அபாய அறிவிப்புப் பலகை தெரிந்தது. - புயலிடை அமைந்த ஹரிக்கேன் விளக்கு நடுங்கியது. - ' என் வாழ்க்கைப் பயணத்துக்கு ஏற்பட்டிருப்பது இதே மாதிரி அபாய அறிவிப்புத்தாளு?...காரணமின்றிக் கைப்பிடியை இழுத்து, ஒடும் வண்டியை நிறுத்கி ஐம்பது ரூபாய் தெண்டம் அழுதுவிட்டால், தலை தப்பிவிடும். ஆளுல், மேகலையின் ஜாதகக் குறிப்பு காட்டிய அபாய அறிவிப்பு என்னை எப்படிப் பாதிக்கும் ? நானும் மேகலையும் எங்கள் ஜாதகங்களைத் தள்ளிவைத்துவிட்டு நாங்கள் ஒன்று சேர்ந்து விட்டால்-அப்புறம் அந்த அபாய அறிவிப்பு எங்களை என்ன செய்ய முடியும்?'. என்று பலவாருக நினைத்து நினைத்து மனத்தை விழி. வெள்ளத்தால் கழுவின்ை. ', ': ' -