பக்கம்:வெண்ணிலவு நீ எனக்கு.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

@

  • காதலெனுத் தீவினிலே ராதே, ராதே!-அன்று கண்டெடுத்த பெண்மணியே! நாதே, ராதே ”

ைேகலாயபதியைக் கொண்டவனுக ஏற்கக் கனவு கண்டாள் உமையவள். பரமசிவன் தவம் புரிய இமாலயத்திற்கு வந்தான். குற்றேவல் புரியத் தன் குலச் சுடரை அனுப்பினுன் மலையரசன். தாரகனின் கொடு மைகளைத் தாளமாட்டாமல் தவித்த தேவர்களுக்குப் பிரமனின் ஆலோசனை யொன்று கிடைத்தது. அதன் படி முக்கண்ணனுக்கும் இமயவல்லிக்கும் திருமணம் செய்து வைத்துவிட்டால், அவர்கள் இருவருக்கும் பிறக்கும் மைந்தன் மூலம் தேவர்களுக்கு விடிவும் வாழ்வும் கிடைக்கும் என்ற உறுதி உருவானது. பணி விடை செய்து வந்த தேவியின்பால் நாட்டம் உண்டாக்க எண்ணிய வசந்தன், தருணத்தைப் பயன்படுத்திக் கொண்டு கனே தொடுத்தான், ஐயன்பால். அரவணிந்: தோன் முக்கண் திறந்தான் பார்வதி தட்டுப்பட்டாள். தன் நிலையை உணர்ந்த பித்தன் காமன் மீது கடுங் கோபம் கொண்டு அவனை எரித்தான். மலே மடந்தை மனம் நொந்தாள்; அழகிளுல் ஆண்டவனே அடைய முடியாதென்றும் தவமொன்றே தக்க வழியெனவும் உறுதி பூண்டாள். இடைப் பட்ட சோதனைகள். துடைக்கப்பட்டன. உமையவளின் கனவும் தவமும் பலித்தன. உலகத்தின் அன்னை அவள் ! - கண்ணின் கருமணிகள் நோவு எடுக்கும் பரியந்தம் மேகலை அந்தச் சித்திரத்தில் கண் நோக்கு செலுத்தி யிருந்தாள். தாயே, உன் தவமும் கனவும் பலித்தது போலவே என் கனவும் தவமும் நிறைவேறு மென்று மனக் கோட்டை கட்டியிருந்தேனே ?...கடைசியில், என்னையே நான் அழித்துக்கொள்ள வேளை பார்த்திருக் கும் அளவுக்கு என்னை ஆளாக்கி விட்டாயே?...என்.